Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட... posted byCnash (Makkah )[02 January 2012] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15391
அஸ்ஸலாமு அலைக்கும்!!
இந்த பிரச்னை தலைதூக்க ஆரம்பித்த நாளில் இருந்தே எங்கள் தெருவாசிகள் பல களங்களிலும் மேலும் சில நாட்களாக நாங்களும் இது போன்ற இணையதளங்களிலும் விவாதித்து களைத்து விட்டோம்... ஆனாலும் இதற்கு ஒரு நல்ல முடிவு வரும்வரை தளர்ந்து விடமாட்டோம்.
பிடிவாதகாரர்களின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. எனவே KTM தெருவாசிகலான நாங்களும் எங்கள் போக்கை மாற்ற இருக்கிறோம். இனியும் விட்டு கொடுப்பது, படியில் ஆரம்பித்து படிப்படியாக வீடு வரை இழந்து கொண்டிருக்க நாங்கள் மட்டும் இளிச்சவாயர்கள் இல்லை. ஊர்நலன் பேணப்பட வேண்டும், அதற்காக நாங்கள் இழந்தது ரெம்பவே அதிகம். இறங்கி போய் உரிமையை இழந்து சுமைதாங்கி பட்டத்தை சுமப்பதை விட இறங்கி போராடி உரிமையை நிலை நாட்டவே எங்களின் இன்றைய சந்ததியினர் விரும்புகின்றனர்.
அவர்களுக்கு சுகத்தை அனுபவிக்க மட்டும் ஊரும், ஊர் மக்களின் ஆதரவும் வேண்டும், அதை எல்லாம் காலங்காலமாய் அனுபவித்து விட்டு இன்று அவர்கள் ஜமாத் மட்டும் காயல்பட்டினத்தின் தனித்தீவை போல செயல்படுவது, இதை முன்ன்னின்று நடத்தும் முற்போக்குவாதிகளை(!) உண்மையாக ஊர் நலம் பேணுபவர்கள் கண்டிக்க வேண்டும்.
இது ஒன்றும் தனிப்பட்ட இரு ஜாமாத்துக்கோ, தெருவுக்கோ உள்ள பிரச்னை இல்லை. ஊர் நலனை எதிர்கொக்கி இருக்கும் பிரச்னை எனவே ஊரின் மற்ற பொதுநல அமைப்புகளும், பேரவையும் முன்வந்து எதிர்நோக்கி இருக்கும் முட்டுகட்டைகளை தகர்த்த முன்வர வேண்டும்.
இவர்களின் சுயநல போக்கை இப்படியே தொடரவிட்டால் இன்று ஆணவத்தில் KTMதெரு, மெயின்ரோடு, HATதெரு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் இல்லாத ஒன்றை இட்டுகட்டி காட்டி கொடுக்க முயற்சிபவர்கள். நாளை அவர்கள் தெருவின் உள்ள ஒரு 100 பேர் சொகுசா வாழ்வதற்கு சுற்றி இருக்கும் இரண்டு தெருவையும் அகற்ற சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை.
நகராட்சிக்கு வெறும் கருத்து கேட்பதோடு அதன் பணி முடிந்துவிடவில்லை. மாறாக மக்களுக்கு நல்லது எது என்று தொலைநோக்கு பார்வையில் திட்டமிட்டு வரும் எதிர்ப்பை எல்லாம் பின்தள்ளி விட்டு, உரிய திட்டத்தின் மூலம் ஒரு வழிபதை பிறக்க வழிசெய்ய வேண்டும். எதிர்ப்பை மட்டும் கருத்தின் கொன்டால் இவர்களை விட பலமடங்கு வீரியத்தோடு எதிர்பதற்கு எங்களுக்கு எல்ல உரிமையும் திறனும் இருக்கிறது... ஊர் நன்மை கருதி தாங்கிகொண்டிர்கிறோம்.
இறுதியாக, துணைதலைவரின் நிலை தடுமாறிய நிலை அவருடைய நாளைய அரசியல் ஒட்டு கணக்குக்கு வேணுமானால் சரியாக இருக்கலாம், நீதிக்கும் நியாயத்திற்கும் உகந்ததல்ல!! அவர்கள் தரும் மனுவை கொண்டு போய் நகர்மன்றத்தில் சமர்பிக்க நீங்கள் வகிக்கும் பதவி ஒன்றும் தபால்காரர் பணி அல்ல.. நாளை அவர்களின் நீதமில்லாத கோரிக்கைக்கு துணை தலைவர் உடன்பட்டார் என்றுதான் நகராட்சி அலுவலக பதிவுகள் சாட்சி கூறும்.
அவர்களின் கோரிக்கைகளின் ஒன்றான KTM தெரு ஆக்கிரமிப்பு அகற்றபட வேண்டும் உட்பட கோரிக்கையும் நெசவுதெரு ஜமாத்தார் சார்பாக துணைத்தலைவர் வைத்தார் என்றுதான் நகரமன்ற ஆவணத்தில் கருதபடும்.
நீங்கள் பொதுவானவர்தான்.. அநீதிக்கும் அசத்தியதிக்கும் பொதுவானவர் இல்லை... நீதி செய்வதிலும் நன்மை செய்வதிலும் மட்டுமே பொதுவானவராக இருங்கள்!! எல்லோரையும் திருப்தி செய்ய முயற்சிப்பதை விட்டுவிட்டு நல்லோர்களை திருப்தி செய்யுங்கள்.. நல்லவைகளுக்கு துணை போகும் துணை தலைவராக மட்டும் இருங்கள்!! அது நம் ஜமாதிர்க்கும் தெருவிற்கும் எதிராக இருந்தாலும் கூட!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross