Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக... posted byKaleel Rahman (Chennai)[02 January 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 15403
சகோ. சதக் தம்பி அவர்கள் கூறியது போல் மாற்றுவழிசாலை முதலில் இருவழி போக்குவரத்தாக தொடங்கி அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்றார்போல நால்வழி போக்குவரத்து செல்லும் விதமாக அமைக்கப்பட வேண்டும். மாற்றுவழிசாலை ஏற்படுத்துவதன் மூலம் ECR தேசிய நெடுஞ்சாலையின் பயனை நாம் அனுபவிக்க முடியும்.
நாம் ECR ரோட்டை பெறுவதற்கு ஓடக்கரை-பூந்தோட்டம் -ரத்தினாபுரி பாதையை தேர்ந்து எடுப்பதை விட்டு விட்டு குருகிய வட்டதிற்குள் "கிணற்று தவளையை போல்" காயல் to ஆத்தூர் சென்று வர பத்து ரூபாய் வருது ஆட்டோக்கு முப்பது ரூபாய் வருது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்.
சென்னையில் இருந்து வரும்போது திருச்சி மதுரை எல்லா ஊருக்கும் பஸ் போகாது. புறவழி சாலையை மட்டும் தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். அது போலதான் நமது ஊருக்கும்.
இதனால பயன்படுவது நாம்தான். நாம் தவறும் பட்சத்தில் தற்போது பயன்படுத்தும் அடைகலாபுரம் ரோட்டையே அவர்கள் பயன்படுத்துவார்கள்.
எல்லா பேருந்தும் KTM தெரு வழியாக தான் செல்கிறது என்பதற்காக எல்லோரும் அவர்கள் வீட்டு வாசலிலா பஸ் ஏறுகிறார்கள் ?? அவரவர் வசதிக்கு ஏற்றார் போல் நடந்தோ அல்லது ஆட்டோவிலோ பஸ் ஸ்டாப் சென்று தானே ஏறுகிறார்கள்??
அதை போலதான் ECR புறவழி சாலை என்பதனையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நெசவு தெரு அல்லாத ஒரு வழி பாதை வருவதின் மூலம் HAT தெரு , சின்ன நெசவு தெரு , KTM தெரு மக்களும் சற்று நிம்மதி அடைவார்கள் என்று இருக்க, ஒரு சிலர் மட்டும் ஏன் நெசவு தெரு வழியாகத்தான் ஒரு வழி பாதை வேண்டும் என்று சொல்வதை தான் சற்றும் ஏற்று கொள்ள முடியவில்லை.
எனக்கு தெரிந்தவரை மெயின் ரோட்டில் தான் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பும் , வாகங்களை நிறுத்தி வைப்பதுமே. ஆனால் இதனை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனை அகற்றுவதற்கு நமது நகராட்சியும் எந்த முயற்சியும் எடுப்பது போல் இல்லை.
"திருடனால் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross