63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(ஆனால்), அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கிறான்.
100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுஆஸ்(ரலி)அறிவித்தார்.
VOLUME :1 BOOK :3
கடலூர் மா.வ.,ஆயங்குடி சார்ந்த சென்னை புரசை வாக்கம் மஸ்ஜிதின் இமாமான மவ்லவி. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் 31-12-2011 சனி பின்னேரம் ஞாயிறு இரவு 9-30 மணி அளவில் வஃபாத் ஆனார்கள்.
2-156,,,. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்”
என்று கூறுவார்கள். பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க ஒரு உன்னதமான இறை விசுவாசி. அவர்கள் மறைந்து விட்டாலும் அவர்கள் எழுதிய நூல்கள், அவர்கள் பேசிய பேச்சுக்கள் கம்ப்யூட்டர் ஒலிப்பதிவுகள் செய்தவற்றை நமது அலைபேசிகளில், மடிக்கணினிகளில் ஓடவிட்டு கேட்கும் போதும் பார்க்கும்போதும் நம்மிடையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிலைத்திருப்பவர்கள் மிகச் சிலரே. அந்த வருசையில் ஆலிம் அவர்கள் பெரிய வெற்றிடத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டு விட்டு மறைந்திருக்கிறார்கள்
وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ - கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான் 2-76 எனும் மறை வாக்கியத்தின்படி அல்லாஹ் நமக்கு மற்றொரு எத்தனையோ மகான் களை தருவானாக!
மவ்லானா நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களது மறைவு உலகுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். இறைமறையை இனிய தமிழில் அர்ப்பணித்த கண்ணியமிகு மேதை. தோற்றத்தில் எளிமை, பேச்சினில் நசூக்கான நகைச்சுவை நளினம், பழகுவதில் மென்மை , ஒழுக்கமான, நேர்மையான பொது வாழ்வு, இதுதான் நிஜாமுத்தீன் ஹழரத் அவர்கள். உதாரண்த்துக்கு ஒன்று, சென்ற 2006 ல் சென்னை மத்ரஸா யே நிஸ்வான், பொன்விழாவில் ஒரு பயானில்.. இக்கால பெண்களின் அரை குறை பர்தாவைப் பற்றி கண்டித்து கூறும்போது ஒரு நகைச்சுவை;
” அண்ணலும் நோக்கினார்- அவளும் நோக்கினாள்” என்ற ஒரு காதல் இலக்கிய நூலில் ஒரு வாக்கியம் உண்டு. அதனைச் சொல்லி விவரித்து விட்டு “அண்ணன் (வாலிபன்) கையிலும் நோக்கியா இவள் (வாலிபி) கையிலும் நோக்கியா ” என்று நகைச்சுவை நயத்தோடு இக்கால வாலிபர்களும் வாலிபி களும் தவறான முறையில் NOKIA செல் உரையாடி வாழ்க்கையை பழாக்கும் கலாச்சாரத்தை கண்டித்தார்கள்.
நிற்க, ஒரு முறை எனது வேண்டுகோளின் படி தஃலீம் கிதாபுகளில் கையாளப்படும் பல, பல கடின தமிழ் வார்த்தைகளை குறிப்பாக இலங்கை மக்களுக்காகவே இலகுவாக மாற்றி அமைத்தார்கள். இதற்கு தனிப்பட்ட முறையிலும் நான் நன்றி கூறினேன். அவர்கள் தொகுத்தும், தற்ஜமா செய்தும்,ஹஜ் வழிகாட்டிகள், பல்சுவை மலர்,ஸலவாத்தின் சிறப்பு, அமல்களின் சிறப்பு, சாந்தி நபி,ஹயாத்து ஸஹாபா, துஆக்களின் களஞ்சியம் மற்றும்.. அநேக நூல்கள் எழுதிய பன்னூல் ஆசிரியராவார்கள். அல்லாஹுமங்ஃபிற் லஹூ...வற்ஹம்ஹூ.
மேற்கண்ட கிதாபுகளில் அநேகம் இன்றளவும் கோடிக்கணக்கில், மில்லியன் கணக்கில் உலகளவில் வாசிக்கப்படும் தப்லீக் தஃலீம் ஹல்கா ளில் வாசித்து மிகப்பெரிய நன்மையை பெற்று வருகின்றனர்.
மேலும் சமீபகாலமாய் மார்க்கத்தில் தடுமாற்றத்தில் இருந்த மக்களை குறிப்பாக வாலிபர்களை “ஹை அத்துஷ் ஷரீ ஆ பேரவை” எனும் மார்க்க முன்னேற்ற சபை மூலம் மற்ஹூம் ஃகலீல் அஹ்மதுகீரனூரி மவ்லானா அவர்கள், மவ்.முஸ்தஃபா ஹழரத் அவர்கள்,மவ்.றூஹுல் ஹக் ஸாஹிப் அவர்களோடும் பல உலமாக்களோடும் தஃவத் பணிகள் பல செய்து மக்களை விழிப்படையச்செய்து மிகப்பெரிய சேவைகள் செய்து ழலாலத் என்னும் வழிகேட்டை விட்டு வாலிபர்களை அல்லாஹ் உதவியால் காப்பாற்றி வந்தார்கள்
திருமறை மொழியாக்கத்தில் அவர்களோடு சேர்ந்து பணியாற்றிய பெருமதிப்பிற்குரிய முற்ஷித்னா, ஷைகுல் தர்ஜமா, மவ்லானா. மற்ஹூம் அப்துல் வஹ்ஹாப் M.A.,B.Th , ஆகிய அறிஞர்களோடு உறவாடும் பாக்கியம் கிட்டிய எனக்கு, ஹழஜ்ரத் அவர்களது மறைவு ஒரு பேரிழப்பாகும்.
நேற்று பகல்1-1-1012 ஞாயிறு 2 மணியளவில் சென்னை,தானா தெரு மையவாடியில் மர்ஹூம் அவர்களின் பணி செய்த இடமான புரசை, ஜாமிஆ மஸ்ஜிதிலே மற்ஹூம் அவர்கள் தொழுது. ஃகுத்பா ஓதி தொழவைத்து இமாமத் செய்த அதே மிஹ்றாபில் ஜனாஸாவை (இது ஒரு நற்பாக்கியமே) வைத்தே ஜனாஸா தொழுது, சென்னை,தானா தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா தொழுகையில், மஸ்ஜிதில் 3 மாடியும் நிறைந்து வெளியிலும் சுமார் 10-13 ஆயிரம் பேர்கள் தொழுது துஆ செய்தார்கள் என அறிகிறோம்... அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற்ஹம்ஹூ. அல்லாஹும்மஜ் அல் கப்றஹூ றவ்ழத்தன் மின் றியாழில் ஜினான்.. ஆமீன்.
இன்று திங்கள் ( 2-1-2012) இரவில் காயல்பட்டணம் ஜாவியாவில் ஙாயிப் ஜனாஸா தொழுது, இரங்கல் கூட்டம் நடத்தி ஈஸால் ஃதவாபும் நாடி துஆவும் செய்யப்பட்டது.
மேலும், இன்ஷா அல்லாஹ் இன்று காயல்பட்டணம் அறூஸுல் ஜன்னஹ் மத்றஸதுன் நிஸ்வானில்.ஃகத்தம் ஓதி ஈஸால் ஃதவாபு துஆவும் செய்தோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross