செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சீரழிவுக்கு வெளியூர்காரர்கள் மட்டும் காரணம் இல்லை! posted byFirdous (Colombo)[03 January 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15464
கலாச்சார சீரழிவிற்கு வெளியூரில் இருந்து வருபவர்கள் மட்டும் காரணம் இல்லை!
பெருநாள் காலங்களில் கடற்கரைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து செல்வதை காணலாம். அப்பொழுது நமதூர் ஆட்களே அதிகம்! யாரை குறை கூறுவது! கடற்கரையிலும் கலந்தே காணப்படுகிறார்கள். சிலர் தலையில் shawl missing!
கடற்கரையை பகுதி பிரிப்பதால் ஆண், பெண் கலப்பதை தவிர்க்கலாம். மேலும் குழந்தைகளை கூட்டிகொண்டு போனால் எப்போது பந்து மேலே வந்து விழுமோ என்று பயம். இவையெல்லாம் களையப்படலாம்.
செய்தியை நன்று கவனித்தால் கடற்கரையை அழகுபடுத்த நண்பர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக தூய்மை, ஒழுங்கு படுத்தவே அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
சிறுவயதில் (10 வயதிற்குள்) ஜலம் போகவேண்டும் என்றால் கடற்நீரில் அலையும்போது கொஞ்சம் ஆழம் சென்று தண்ணீரோடு கலந்துவிடுவோம். இப்போ நிலைமை ரொம்ப மோசம். வீட்டுக்கோ, அல்லது அருகில் இருக்கும் பள்ளிக்கோ விரையவேண்டி உள்ளது. Toilet வசதி வந்தால் இந்த அசௌகரியம் இருக்காது. தொழுகையாளிகளுக்கும் மிகவும் பயனுடையதாக இருக்கும்.
நகராட்சி தலைவருக்கு அன்பு வேண்டுகோள்!
1) கழிப்பறை வசதி செய்தவுடன் அதை கட்டண கழிப்பிடமாக ஆக்கினால் பராமரிப்பை செவ்வனே செய்யலாம்.
2) கடை போடுபவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி மேடை அமைத்து கொடுத்து அங்கு மட்டுமே கடை போட அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்களது கடைகளை சுற்றி குறிபிட்ட எல்லைக்குள் இருக்கும் குப்பைகள், கறித்துண்டுகளை அவர்களே களையே வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் கடை போட அனுமதிக்ககூடாது. (இவையும் கவனித்தால் நன்று:- கஞ்சி, வாடாக்கள் சூடாக மட்டுமே உள்ளது! எப்போது செய்தது என்று யார் அறிவார்?)
3 ) விளையாடும் இடத்தை பகுதி பிரிக்கும்பொழுது வேலிக்கொண்டு அடைத்தால் பந்து அமர்ந்து இருப்பவர்கள் மேல் விழாது.
"விளையாட்டுன்னு வந்தால் அடிபடத்தான் செய்யும் - என்று கூறுவது காதில்விழத்தான் செய்கிறது. அதுக்காக பார்வையாளர்களுக்கு அடிவிழுந்தால் மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross