செய்தி: ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
"ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில் அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் . வசனம் 25:72 "
"பேரூந்துகள் அவ்வழியே ஒரு மாதத்திற்கு மேல் சென்று
கொண்டிருக்கும்பொழுது" மாவட்ட காவல்துறை,
நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவைகள் பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை அமுல்படுத்த வேண்டி புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பெரிய நெசவுத்தெரு நுழைவு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பல லட்சம் ரூபாய் செலவழித்து ரோட்டினை அகலப்படுத்தினார்கள்.
இந்த பொய்யான செய்திக்கு நீங்கள் சாட்சியாக கையெழுத்து போட்டு இருக்கிறீர்கள்??? கையெழுத்து போட்டு இருக்கும் எவரேனும் இதனை உறுதி படுத்த முடியுமா ? செய்தியின் நம்பக தன்மை அறிந்து கையெழுத்து போட்டீர்களா அல்லது அறியாமல் போட்டீர்கள என்பதை வல்ல இறைவன் அறிவான்.
எங்கள் தெரு வழியாக 3 அல்லது 4 நாட்களுக்கு மேலாக பஸ் போனது கிடையாது. அதுவும் பரிசோதனைக்காகவே சென்றது!!!
"தான் விரும்பியதையே உன் சகோதரனுக்கும் நினை"
வாகன போக்குவரத்து நெருக்கடி நெரிசலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதால், அதனால் ஏற்படும் பல இன்னல்களை அன்றாடம் அனுபவித்து வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தற்போதுள்ள வாகன நெருக்கடியால் பல இன்னல்களோடு,
பலவகையான பாதிப்புகளுக்கும் ஆட்படுகிறோம். KTM தெரு மக்களுக்கும் மற்றும் அல்ல, HAT தெரு, சின்ன நெசவு தெரு மக்களுக்கும் தான் இன்னல்களும் பாதிப்புகளும் என்பதை கருத்தில் கொண்டே எங்கள் தெரு நெசவு ஜமாத்தார் மாற்று வழி பாதையை முன் வைத்தோம்.
அவர்களின் துயர் துடைக்க சகோதரர்களாய் நாங்கள் நினைத்தவை தவறா ? அல்லது தாங்கள் அனுபவித்து வரும் இன்னல்களும் பாதிப்புகளும் அனைவரும் பட வேண்டும் என்று நினைக்கும் சகோதர்களின் நினைப்பு தவறா ?
வாகன போக்குவரத்து நெருக்கடி நெரிசலும் நாளுக்கு நாள்
கூடிக்கொண்டே தான் போகும். அதற்கு நிரந்தர முடிவு என்பது பெரிய நெசவு தெரு வழி இல்லை. மாறாக மாற்று வழியே
என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
"ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்கு கீழே அழுந்துப் போய் விடுவான். - இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"
காயல்பட்டணம் முன்னால் நகராட்சி தலைவர் அவர்கள் தலைமையில், ஊர் முக்கியமானவர்களடங்கிய குழு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் ஒருவழிப்பாதைக்கு பொறுத்தமான வழி பெரிய நெசவு தெரு தான் என்று ஏகமனதாக ஏற்று 05-04-2007 அன்று தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறார்கள்.
"தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட
ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம்
என பரிந்துரையும்"
1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம்
பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் இருப்பதை பற்றி யாரும் கண்டு கொள்ளாமலும், யாரை வைத்து தீர்மானம் போட்டார்களோ (ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர்) அவர்களே பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அறிவித்த பரிந்துரையை ஏற்காமல் நகராட்சி தீர்மானம் பற்றி மட்டும் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை நீங்கள் யோசிக்கவில்லையா ??
Comment Reference Number: 15500
வெளியூரில் படிக்கும் எனது மகன் ஒவ்வொரு முறையும் திருச்செந்தூர் சென்று பஸ் ஏறவேண்டிய நிலை.
சென்னைக்கு வந்து இறங்கும் உங்களது மகனை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்க்கு பதில் வீட்டு வாசலில் இறக்க சொல்ல முடியுமா அல்லது நீங்கள்தான் தூத்துக்குடியிலிருந்து சீனாவிற்கு செல்ல முடியுமா சகோதரே??
Comment Reference Number: 15501
நமதூரில் பஸ் போக்குவரத்து நடைபெறவேண்டும் என்றால் ஏதாவது ஒரு தெருவாசிகள் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். அந்த வகையில் K.T.M. தெருவாசிகள் தியாகம் செய்துதான் உள்ளார்கள்.
ஏன் அதுபோன்ற தியாகத்தை (ஒரு வழி பாதைக்காக) நெசவு தெருவாசிகள் செய்ய மறுக்கிறார்கள்.
நாங்களும் சின்ன நெசவு தெருவை தியாகம் தான் செய்து தான் உள்ளோம் என்பதை சற்று நினைத்து பாருங்கள். இன்னும் கூற போனால், KTM தெரு மற்றும் பிற தெருக்களில் இருக்கும் முடுக்கு கூட எங்கள் தெருவில் இல்லை என்பதை சிந்தித்து பாருங்கள்.
Comment Reference Number: 15509
நெசவுதெரு ஒருவழி பாதை நிறை வேறினால் ரூட் பஸ் , வெளியூர் கணரக வாகனம், லகு வாகனங்களுக்கு தானா?அல்லது நம்மூர் லாரி, (குட்டியானை)லோடு ஆட்டோ ,கார் , உள்ளூர் ஆட்டோ ரிக்ஷா இவைகளுக்கு விதி OWT விலக்கா?
நக்கலாக கேட்பதற்கு முன் தற்போது எப்படி பயன் படுத்துகிறார் என்று ஊரில் இருக்கும் உங்களுக்கு தெரியாதா சகோதரே???
யார் எப்படி போனால் என்ன, உங்கள் விவாதத்தில் நான் குளிர் காய்கிறேன் என்று கமெண்ட்ஸ் எழுதும் இவருக்கு நான் என்ன கூறுவது என்று தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross