மக்கள் மன்றத்தின் ஊழியரே கமிசனர்! மக்களின் பிரதிநிதிகளுக்கு கட்டாயம் பதில் தந்தே இருக்கவேண்டும்!!! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[05 January 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15580
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோதரர் A . லுக்மான் அவர்கள் மக்களுக்காகவும், பிரிதிநிதிகளுக்கும் மிக மிக அவசியமாக தெரிய வேண்டிய மற்றும் எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற அடிப்படையான பொருளாதார மற்றும் நிதி நிலைகளை பற்றி மிக அக்கறையுடன் கேட்டுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
தலைவியே! தங்களின் நிலைப்பாடு இதன் விசயத்தில் என்ன.
கமிசினரின் தணிக்கை காரணமாக அவரின் ஒப்புதல் இல்லாமல் தாங்கள் இந்த நியாயமான கோரிக்கைகளை அனுமதித்து விவாதத்திற்கும், தகுந்த பதில் பெறவும் ஏன் செய்யவில்லை.
நகரமன்ற ஊழியர் முதல் அதிகாரிகள் வரை மக்களுக்காக தான் அவர்கள் வேலை செய்வதை முதலில் நன்கு உணரவேண்டும்.மேலும் இந்த நகர்மன்றம் முன்பு போல் அரசியல் கலந்த நகர்மன்றம் இல்லை மாறாக மக்களுக்காக மக்களின் முழு விருப்பத்துடன் தனி நபர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு நான் முன்பு கருத்து பதிந்தது போல் உரிபினர்களுடேன் அதிகாரிகளாகிய தங்களையும் மக்கள் மிக கவனமாக கவனிக்கிறார்கள் என்பதை இந்த கமிசனர் தொடர்சியாக மறந்து வருகிறார் என்பதையே இந்த தணிக்கை நாடகம் நிருபிக்கிறது.
மேலும் இந்த கமிசனர் அவர்கள் பல சமயத்தில் தலைவி மற்றும் உரிபினர்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக முக்கியமான விசியங்கலாகிய சுனாமி குடியிருப்பு ஆக்கியமிப்பு முதல் இரண்டாம் குடிநீர் திட்டம் வரை, அதிகாரிகளின் கலந்துரையாடலுக்கும் மற்ற பிற செயலுக்கும் தன்னிசையாகவே செயல்படுவதும் இது போல் மக்களுக்கான நியாமான விசியங்களை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பதில் கூறுவது ஆடிட்டிங் அதிகாரிகளை விட அதிக கடமையும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை மறந்து செயல் படுவது கண்டனத்துக்குரியது.
தேவைபட்டால் பதில் கூற கூட்டத்தில் உரிபினர்களிடம் கால வாகாசம் கேட்டிருக்கலாம்.
கமிசினரின் செயல் மீண்டும் இது போல் தொடர்ந்தாள்... நகரமன்ற உரிபினர்ல்களே ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல மக்களுக்குக்காக பாடு படும் மிக நேர்மையான அதிகாரிகளை பெற தீர்மானம் இயற்றி முயற்சி செய்திடுங்கள்.
அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளே தாங்கள் அனைவர்களும் மக்களுக்காக நேர்மையாக செயல்பட்டால் இந்த காயல் மாநகர மக்கள் நன்றயுடேன் தங்களின் நல்ல செயலுக்கு பாராட்டி கவ்ரவிப்பார்கள். இல்லையேல் கவிழ்க்கவும் தயங்க மாட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross