Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக... posted byஅமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு)[05 January 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15585
அன்பின் சகோதரர்களுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும் .
சகோதரர் ஒருவர் எனது கருத்தை மேற்கோள் காட்டும்பொழுது நான் புதிய யுக்தியில் இறங்கியுள்ளதாக எழுதியுள்ளார்.மேலும் சில சகோதரர்களின் கருத்துகளில் சில தவறான தகவல்களையும் அளித்துள்ளனர். நான் இங்கு எதிர்வாதம் புரிவதற்காக எழுதவில்லை. மிகுந்த வேலைபளுவுக்குமிடையில் தவறான கருத்துகள் பரப்ப்ப்படுகின்றனவே என்ற அடிப்படையில்தான் எழுதுகின்றேன்.
சகோதரரே நான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன். மாற்றுவழிப்பாதை சின்ன நெசவுத் தெருவையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பது என்போன்றோரின் அவா.இது புது யுக்தியாக இருக்கலாம் நிச்சயமாக இது குயுக்தி இல்லை.
வாகன நெரிசல் மிகுந்துள்ள இக்காலத்தில் ஒருவழிப்பாதை அவசியம்தான். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்வதெல்லாம் நமது பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் (பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஒருவழிப்பாதைக்குமே இடைஞ்சல்தான்). ஆனால் விவாதங்கள் திசைமாறி செல்கின்றது. இதையே சாக்காக கொண்டு சிலர் தனிநபர்களையும், சமுகத்தையும் பழங்காலச் சொற்களால் தாக்கிக்கொள்ளும் அவலமும் நடைபெற்று வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. இது ஒற்றுமையுள்ள இரு ஜமாஅத்துகளிடையே கலகத்தை மூட்டும் செயலாக அமைகின்றது. இது உடனே தடுக்கப்பட வேண்டிய செயல். இரு ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் உடனே சந்திக்க வேண்டும், அவர்கள் தங்களுக்கிடையே உள்ள கருத்துகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் இரு ஜமாஅத்தின் நல்உறவுகள் முன்பு போன்றே தொடரவேண்டும்.
அடுத்ததாக பெரிய, சின்ன நெசவுத் தெருக்கள் புது குடியேற்றங்கள் என கருத்து பரப்ப்ப்படுகின்றது. காயல்பட்டின வரலாற்றை ஆராய்ந்தால் தெரியும் பழமையான தெருக்கள் எவை என்றும் புதிய குடிகள் எவை என்றும்.
உதாரணத்திற்கு நெசவுத் தெரு, கோமான் தெரு, பரிமார் தெரு, கிராம முனிசிபல் கச்சோரி தெரு (KMK Street) (கச்சேரி என்பது மக்கள்கூடும் இடம் நம்மில் சிலருக்கு பாட்டுகச்சேரிதான் ஞபாகம் வரும்). செக்கடி தெரு (அலியார் தெரு), சித்தன் தெரு, கருத்த தம்பி மரைக்காயர் தெரு (KTM Street) (இன்னும் சில) ….இப்படி சில தெருக்களே பழமை வாய்ந்தவை. இங்குள்ள திருமண முறைகள் இன்றும் நபிவழிப்படி பேணப்பட்டு வருகின்றது. (மஸாயிலுக்குள் நுழையவில்லை கருத்து வந்ததால் பதிவு செய்கிறேன்.). இதுதான் நடைமுறையில் இருந்தது பின்னர் காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டது. புதிய தெருக்களும் வந்தன. (நிற்க)
ஒருவழிப்பாதைக்காக தவறான புரிதல்களால் ஒருவரையெருவர் சாடிக் கொள்வது சிறந்த முன்னுதாரமாக தெரியவில்லை. நமதூர் மக்கள் ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களில் தியாகங்களை புரிந்துள்ளனர். தியாகங்கள் பற்றி விவாதிக்கும் தருணமே தளமே இதுவல்ல. மாறாக பொதுமக்கள் பாதிக்காவண்ணம் கலந்துபேசி சுமூகமான தீர்வு எடுக்கப்பட வேண்டும்.
தற்போது முஸ்லிம்கள், இந்திய அளவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். பாசிச சக்திகளும், ஊடகங்களும் முஸ்லிம்கள்மேல் பழிசுமத்தும் போக்கை கடைபிடித்து வருகின்றன. மேலும் ஒரு கூட்டம் முஸ்லிம்களை உயிராலும் பொருளாலும் மானத்தாலும் கறுவருக்க துடித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஒருபுறம்.
மேலும் தமிழகத்தில் அணுஉலையை நிறுவ இந்திய அரசே முன்கை எடுக்கின்றது, அணுஉலை கூடங்குளத்திற்கு வந்தால் காயல்பட்டினத்தின் சுகாதரத்திற்கும் உலைதான், DCWவின் பாதிப்பிலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை இதில் இதுவும் வேறு. நம்முடைய போராட்டங்களெல்லாம் மேற்கூறியவைகளை நோக்கி திரும்ப வேண்டுமே தவிர மாறக அற்பவிஷயங்களுக்காக போராட்டத்தை திசைதிருப்புவது சரியல்ல.
ஒருவழிப்பாதைக்கான அனைவர்களின் முறையீடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்றுள்ளதாகவே நாம் அறிகின்றோம். நமது போராதரவு பெற்ற நகராட்சி தலைவர் திருமதி ஆபிதா அவர்களின் கூற்றுபடி இதுபற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் நமது மாவட்ட கலெக்டர், மற்றும் வட்டார வாகன அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே அவர்களின் இறுதி முடிவிற்காக நாம் பொறுத்திருக்போம்.
” யாஅல்லாஹ் எங்களின் ஊர் நலனுக்கு ஒருவழிபாதையில் எவ்வழி சிறந்தாக நீ நாடுகின்றாயே அவ்வழியையே நீ எங்களுக்குத் தந்தருள்வாயாக.”.
அன்புடன்
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு.
(கிழக்கு மாகாணம் சவுதி அரேபியா)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross