செய்தி: அனைத்தையும் மறந்து, இணைந்து செயலாற்றி, ஊரை முன்னேற்ற வேண்டும்! முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அனைத்தையும் மறந்து, இணைந்... posted bymackie noohuthambi (kayalpatnam)[06 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15668
கூட்டத்தில் ஒருவனாக நானும் இருந்து பேச்சுக்களை அவதானித்து கொண்டிருந்தேன்.
சகோதரர் காயல் மகபூப் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, தான் 40 வருடங்கள் இந்த ஊருக்காக உழைத்ததை நினைவு கூர்ந்து கடந்த நகரமன்ற தேர்தலிலே ஏற்பட்ட தோல்விகளை எண்ணி மக்களை கடிந்து கொண்டார்.
தோல்விக்கு யார் காரணம் என்று ஆராய்ச்சி பண்ணுவதைவிட என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க ஆளில்லையே என்று நான் நினைதுக்கொண்டிருந்தபோது, அந்த இளம் புயல் வீச ஆரம்பித்தது, பேச ஆரம்பித்தது. தென்றலாய் தாலாட்டி வந்த காற்று பின் கடுமையாக ஆனால் அரசியல் முதிர்ச்சியுடன் பேசியபோது, இவர் என்றாவது ஒரு நாள் முஸ்லிம் லீகின் மாநில தலைவராக வருவார் என்ற எண்ணம் மலர ஆரம்பித்தது. பேச்சிலே இனிமை எடுத்து வைத்த கருத்துகளில் தெளிவு, முற்போக்கான சிந்தனைகள், நடந்து முடிந்த தோல்விகளுக்கு யாரையும் பொறுப்பாக்காமல், இனி எப்படி நடந்தால் வெற்றி கனியை பறிக்கலாம் என்ற சீரான செயல் திட்டம், அப்பப்பா, அசத்தி விட்டார்.
ஒரே ஒரு தவறை மட்டும் முஸ்லிம் லீக் செய்து விட்டது. தனது தனித்தன்மையை இழந்து அடுத்தவர்கள் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றாலும் அதை வெற்றியாக நினைக்க மனம் இடம் தரவில்லை. பிறைக்கொடிக்கு என ஒரு வரலாறு உண்டு. கவ்மின் காவலர் காயிதே மில்லத் வகுத்து தந்த அந்த தனித்தன்மையில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள் என்று உங்களை கேட்டு கொள்கிறேன்.
மற்றப்படி போர்க்குணம் கொண்ட இயக்கங்கள் என்று பெருமயடிப்பவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. SELF IDENTITY, MAGNANIMITY, SOCIAL ACTIVITY THESE FACTORS WILL BRING YOU VICTORY. MAY ALMIGHTY ALLAH BE WITH US. TRUTH ALONE TRIUMPHS.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross