செய்தி: ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதை நான் எதிர்பார்க்கவில்லை... posted byS.K.Salih (Kayalpatnam)[09 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15769
நண்பர் ஜஹாங்கீரிடமிருந்து இப்படியொரு நேரடி தாக்குதலை நான் எதிர்பார்க்கவேயில்லை.
அவருக்கும், எனக்குமிடையில் எந்த தொழில் போட்டியோ, கருத்து வேறுபாடோ, பகையோ இன்று வரை இல்லை.
ஒரு செய்தியாளனாக, நடந்த நிகழ்வுகளை - பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் - அதே நேரத்தில் இயன்றளவு மென்மையுடன் தந்தே பழக்கப்பட்டவன் நான். இதற்காக, பல காலகட்டங்களிலும், பலரது விமர்சனங்களையும், நேரடியாகவும் - மறைமுகமாகவும் பெற்றுக்கொண்டுள்ளேன்.
பொதுவாழ்வு - செய்தித்துறை என்றெல்லாம் வந்துவிட்டால், விமர்சனங்களை வாங்கிப் பழகியே ஆகவேண்டும்... அந்த வகையில் அனுதினமும் வாங்கி, என்னை நான் பட்டை தீட்டிக்கொள்ளவே முயற்சிக்கிறேன்.
அவர் வருத்தப்பட்டுள்ளது போல, அச்செய்தியை நான் உள்நோக்கத்துடன் வெளியி்ட்டிருந்தால், அச்செய்திக்கு வந்த வாசகர் கருத்துக்கள் அனைத்தும் அவரை சாடியே வந்திருக்கும். ஆனால் அப்படி வரவில்லை... நண்பர் ஜஹாங்கீர் தன்னிலை விளக்கம் என்று கருத்துப்பதிவு (எண்: 15715) செய்த பிறகே விவாதம் தொடங்கியது.
அந்த கருத்தில் கூட, (பின்னர் அவர் தெரிவித்தபடி) ரேஷன் கடை தொடர்பான பொதுப் பிரச்சினைக்காகத்தான் வர முடியாமற்போனது என்று அவர் விளக்கிச் சொல்லியிருந்தாலே விவாதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
நண்பர் முஜாஹித் அவர்களின் பெயரை “தகவல்” என்று போட்டுவிட்டு தனது பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளார் என்று தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வலைதளத்தில் தொடர்ச்சியாக செய்தியைத் தரும், படிக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும் நான் “தகவல்” என்று பயன்படுத்தும் விதம் குறித்து...
பொதுவாக எனக்கு ஒரு செய்தியைக் கொண்டு வருபவரை, அல்லது நான் செய்தி வெளியிடுகையில் அதுகுறித்த தகவல்களையும், படங்களையும் தந்துதவுவோரின் பெயரை, “தகவல்”, “படம்” என்று போட்டு வெளியிடுவது வழமை. எனது கேமரா பழுதானதால், கடந்த ஒருவார காலமாக நண்பர் ஜஹாங்கீர், நண்பர் முஜாஹித் ஆகியோரிடமிருந்துதான் நான் படங்களையும், தகவல்களையும் பெற்றுக்கொள்கிறேன். அதனடிப்படையில் அவர்களின் பெயரை வெளியிட்டேனே தவிர, “தகவல்” என்று பெயர் வெளியிட்டதாலேயே செய்தியின் அனைதது வாசகங்களும் அவருடையது என்று பொருளாகிவிடாது.
ஆத்தூருக்குச் செல்ல, கவுன்சிலர் பத்ருல் ஹக் அவர்களை நண்பர் ஜஹாங்கீர் தான் தடுக்கவேயில்லை என்றும், பத்ருல் ஹக் அவர்களும் தான் அவ்வாறு எஸ்.கே.ஸாலிஹ் இடம் சொல்லவேயில்லை என்று மறுப்பதாகவும் நண்பர் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
கவுன்சிலர் பத்ருல் ஹக் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவில்லை. ஆத்தூருக்குச் செல்லும் அந்த வாகனத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் கேட்கும் வகையிலேயே தெரிவித்தார். “நீ வராவிட்டால் பரவாயில்லை... நாங்க செல்கிறோம்...” என்று கவுன்சிலர் பத்ருல் ஹக் நண்பர் ஜஹாங்கீரிடம் சொன்னதாகவும், “இப்டி நீ செய்தால், நாளை உனக்கு ஒன்று என்று வரும்போது நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்” என்று தெரிவித்ததாகவும் கவுன்சிலர் பத்ருல் ஹக்தான் வேனில் வைத்து சொன்னார். அதற்கு வேனில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் சாட்சி.
தற்போது அவர் மறுக்கிறார் எனில், அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இனியும் இதுகுறித்து நாம் விவாதித்துக் கொண்டிருப்பதை விட, வெளியிட வேண்டிய செய்திகளில் கவனத்தை செலுத்துவோம்...
என்றும் யாவரின் அன்பையும், நட்பையும் பெரிதும் விரும்பும்,
எஸ்.கே.ஸாலிஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross