செய்தி: ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவைகள் நல்லதாக நாயன் அருளால் அமையட்டுமாக ஆமீன்... posted byசட்னி .செய்யது மீரான் (ஜித்தா....சவுதி அரேபியா )[09 January 2012] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15783
அஸ்ஸலாமு அலைக்கும்.....
எங்கள் ஐய்ந்தாவது வார்டு உறுப்பினர் ஒரு ஆற்றல் மிக்க அதுவும் பொது சேவையில் மிகுந்த ஆர்வமிக்க இளைஞர்..பொது நல சிந்தனை வாதி..
சிரித்த முகம் கொண்டு எல்லோரிடமும் பழகும் சிறப்புக்குரியவர்....
யாரிடமும் கோபம் கொள்ளாத பண்பாளர்..
இது விசயத்தில் பிறர் மற்றும் அவர் மீது அக்கறை கொண்டவர்கள் அவரை குறை காணவே அதுவும் தான் செய்யாத, மனதில் நினையாத ஒன்றை இவ்வளவு பூதாகரமாக்கி
பிறர் குளிர் காய்கின்றார்கள் என்பதால் தான்.....வேதனை
நம்மில் யாருக்குமே உள்ளாட்சி தேர்தல் பற்றிய
எண்ணம் வரும் முன்னரே
நமது ஊரில் காக்கும் கரங்கள் அமைப்பின் உதவியோடு கடந்த
ரமலானில் ஊரில் உள்ள பொது நல அமைப்பினர்களை
ஒரு இடத்தில் கூட்டி
ஊழல் அற்ற,உறக்கம் அற்ற,உயிர் ஓட்டமுள்ள
நல்லதோர் நகராட்சியை அமைப்பது பற்றி
தம்பிமார்கள் ஜகாங்கிர்,முஜாஹித் அலி போன்றோர்
களம் இறங்கி காரியம் ஆற்றியதை கண்ணால் கண்டவனில்
நானும் ஒருவன்... அவர்களோடு கை கோர்த்தவர்களிலும்
நானும் ஒரு அங்கம்...
இவர்கள் தான் நம்மை விழிப்படைய வைத்தார்கள்....
அதற்க்கு பிறகு தான் நம்மில்
எத்தனையோ புதியவர்கள்,பழையவர்கள்,
மூத்தோர்,இளையோர்கள்
என கண் விழித்தார்கள்,கொடிபிடித்தார்கள்,கூட்டம் கூட்டினார்கள்
கொள்கை வகுத்தார்கள் ,கோஷம்போட்டார்கள்,
பொது இடத்தில் மேடை போட்டார்கள்.....
தம்பி ஜகாங்கிர் கேள்வி எழுப்பி இருந்த
நமதூருக்கு செயல்பட்டுவரும் இணையதள செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தது யார்? என பதிந்திருந்த கருத்துக்கு பக்கத்திலேயே வாசகர்களாகிய எங்களுக்கு சிகப்பு வண்ண எழுத்தில்
சுருக்கமாக தரும் பதில் போல்
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா அவர்களை யதார்த்தமாக நான் அன்று காலையில் சந்திக்க நேர்ந்தபோது, (எனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு) “என் குழந்தைக்கு சுகமில்லை... எனவே நான் செல்லவில்லை... நீங்கள் ஆத்தூர் செல்லவில்லையா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் விபரம் கேட்டபோதுதான் எனக்கு இப்படி ஒரு பயணம் இருப்பது தெரியவந்தது.
என தம்பி எஸ்.கே.ஸாலிஹ் செய்து இருந்தால் இவ்வளவு பெரிதாகி இருக்காது...
மேலும் தலைவி அவர்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் தம்பி ஜகாங்கிர்....
இது தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களோ.....
இனி வரும் காலங்களில் இது போன்ற குறைகள்,மன கசப்புகள் ஏற்படாதவாறு எல்லோரும் பார்த்து கொள்வதோடு தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross