Re:DCW ஆலை விரிவாக்கத்தின் வ... posted byRayyan's Dad!! (USA)[11 January 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15844
ஒரு சகோதரர் குறிப்பிட்டதை போல, இது மாதிரியான ஊருக்கு நன்மை விளைவிக்கும் நல்லதொரு நிகழ்ச்சிக்கு (எந்த விதமான பேதம் பார்க்காமல்) முதன்முறையாக மகுதூம் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கி இருப்பது நல்ல தொரு மாற்றத்தை வெளிகொனர்கிறது. மேலும் மற்ற நிர்வாகத்தினருக்கும் இது ஒரு நல்லதொரு முன்னுதாரணமாக உள்ளது. இதுமாதி எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்போது அதை யார் நடத்துகிறார்கள் அல்லது எந்த அகீதா/கொள்கையை சார்ந்தவர்கள் என்ற பேதம் பார்க்காமல்...எதற்காக நடத்த படுகிறது என்பதனை மட்டும் பார்த்து பரந்த மனப்பான்மையுடன் அனுமதி அளித்தால் மிக நன்றாக இருக்கும்.
அது என்னமோ தெரியவில்லை... நம்முடைய எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்றால் உடனே நம் எல்லோருக்கும் தோணுவது "கடையடைப்புப் போராட்டம்". DCW மீதுள்ள நம்முடைய எதிர்ப்பை கான்பிப்பதட்க்கு, காயல்பட்டினத்தில் கடை அடைத்து என்ன லாபம்? இதுபோல் "சுனாமி குடியிருப்பு" விசயத்துக்காக ஒரு கடை அடைப்பு நடந்தது. என்ன பயன் ? தேவையில்லாமல் (சிறு) வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தான் இடைஞ்சல். பேசாமல் கடையை அடைப்பதை விட, DCW - தொழிற்சாலை முன் எதிர்ப்பாளர்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ஒன்று கூட்டி "தர்ணா" நடத்தலாம் அல்லது ஏற்கனவே தீர்மானத்தில் கண்டுள்ளது படி "எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்தல், நீதிமன்றத்தில் வழக்கு" போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
" எந்தவிதமான நன்கொடைகளையோ, சன்மானங்களையோ, விளம்பரங்களையோ பெறுவதில்லை என்றும், நமதூரில் செயல்படும் அரசியல் கட்சிகள் முடிவெடுத்து செயல்படுமாறு, CFFC அன்புடன் வேண்டுகிறது "
இது எந்த விதத்தில் சாத்தியம் என்று தெரிய வில்லை. பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளுமே இது போன்ற பெரிய தொழிற்சாலை மற்றும் வியாபாரதலங்களின் நன்கொடையில்தான் பொழப்பை நடத்துகின்றன.
காயல் பட்டினம்... கலைகர் பட்டினம் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறும் கட்சி,தாய் சபை (மாநில பொதுச்செயலாளர் நமதூர்காரர். அவர் நினைத்தால் இது போன்ற ஊருக்கு கேடு விளைவிக்கும் பிரச்சனையை தன்னுடைய தலைமைக்கு கொண்டு போய் அறிக்கை மற்றும் போராட்டம் போன்றவைகளில் ஈடுபடலாம்) , மமக, தேமுதீக, அதிமுக , மதிமுக போன்ற கட்சிகள் என்றாவது தங்களுடைய எதிர்ப்பை "தர்ணா" போராட்டத்தின் மூலம்... குறைந்த பட்சம் கண்டன அறிக்கை மூலம் வெளியிட்டு இருப்பது போல் எனக்கு தெரிய வில்லை.
ஏன், இது போன்ற கூட்டு முயற்சிக்கு கூட இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் இருக்குமா என்பது சந்தேகமே.
ஏனென்றால் இதில் தான் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முடியும். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் அல்லது ஏதாவது உப்பு சப்பில்லாத விசயத்துக்கு உண்ணா விரதம். DCW வின் எலும்பு துண்டுக்கு இத்தனை வருடங்கள் எத்தனை பேர் வாலாட்டினர்களோ நமக்கு தெரியாது. இனி வரும் காலத்திலாவது அரசியல் கட்சினரும் மற்றும் ஏனைய அமைப்பை சார்ந்த தலைவர்களும் இவ்விசயத்தில் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பதே நம் அனைவருடைய அவா!!
DCW நமதூரின் நகராட்சி யின் கீழ் தானே வருகிறது. நமது நகராட்சி, தேவையான ஆதாரங்களுடன் ஒரு கண்டன தீர்மானம் ஏற்றி அரசாங்கத்துக்கு அனுப்பினால் எதுவும் நன்மை பயக்குமா என்று பார்க்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross