செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது ஒன்னும் பெரிய விஷயமே இல்லைங்க ! ஏதோ புதுசா செஞ்ச மாதிரி புகழ்ரதுல அர்த்தமே இல்ல இந்த குடும்பத்த பொறுத்தவரை! காரணம் ...கல்விப்பணி தொடுத்து அனைத்து பொது சேவைக்கும் அவர்களின் குடும்பம் எப்பொவுமே முன் உதாரணமாக த்தான் திகழ்றாங்க.
நாடறிந்த நாவலர் என்று அந்த காலத்து பெரியவர்களால் புகழப்பட்ட அமீர் சுல்த்தான் அப்பா அவர்களைப்பற்றி இப்போ உள்ள தலைமுறை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லைங்க...எல் .கே மேல்நிலைப்பள்ளி (மெயின் ரோட்டில் அமைந்துள்ள ) அவர்களின் சரிதம் சொல்வதற்கு ஒரு உரை கல் .அவர்களின் போட்டோவும் அங்கே காணலாம் (இப்போ இருக்கோ இல்லையோ தெரில) . ஆக மொத்தத்தில் பரந்த மனப்போக்கும், விசாலமான தன்மையும் கொண்ட அந்த சந்ததியினர் நம் நகருக்கு விட்டு கொடுப்பது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லைங்க.....இது , ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் பார்க்கிற மாதிரி தாங்க.
நம் நகரின் புகழ் பெற்ற 4 ஆம் வார்டுக்குட்பட்ட 30 வருட பழமை வாய்ந்த குப்பை மேட்டுப் பிரச்சனையிலும், அந்த குடும்பத்தின் வாதி பிரதி வாதியினரின் ஒட்டு மொத்த ஒத்துழைப்பின் பலன் தான் இன்றைக்கு அந்த பகுதி தூய்மையான நிலை பெற்றுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகை யாகாது . அந்த குடும்பத்தார்களின் வாழ்வை வல்ல அல்லாஹ் வளமாக்க து ஆ செய்வோமாக! ஊருக்காக அவர்கள் செய்யும் சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக !
ஜமால் மாமா ...உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தார்களுக்கு ஒரு BIG SALUTE!!!
அன்புடன் என்றும் ,
வாழ்த்தும் நெஞ்சம் ,
K.V.A.T.குடும்பத்தார்கள்
காயல்பட்டணம் /கத்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross