செய்தி: வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம்! ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
4 ஆவது மாதம் நல்லதொரு மாற்றத்தோடு ... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[14 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15922
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரி ஆபிதா அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
--------------------------------------------
தெரிந்தும், புரிந்தும் நடந்தால் :
தங்கள் திட்டத்தின்படி , தொடராக இது போன்று கூட்டங்கள் நடத்தி ஊர் மக்களின் ஆலோசனைகள் பெற்று சிறப்புடன் நிர்வாகம் அமைய வேண்டும் - இது எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்.
வெளிப்படையான நிர்வாகம் என்பது சரிதான் அதே நேரத்தில் எல்லா விசயங்களையும் வெளிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது / எடுத்துக்கொள்ளவும் கூடாது என்பதை நமது நகராட்சி நிர்வாகமும் தெரிந்துக்கொள்ள வேண்டும் நமது நகர மக்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எதையும் தெரிந்தும், புரிந்தும் நடந்தால் நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவே இருக்கும் - இறைவனின் அருளும் பெருகும்.
-------------------------------------------------
கோடி கணக்கில் பணம் :
ஒரு முக்கியமான வேண்டுகோள்! நம் நகராட்சியிலே கோடி கணக்கில் பணம் கையிருப்பு இருக்கிறது - அவைகளை குறிப்பிட்ட ஒருசில மாதத்திற்குள் செலவிடாவிட்டால் - அவைகள் நம் நகர் நலனுக்கு உபயோகமில்லாது போய்விடுமே!!!
ஆகையால் அதற்கு முதலிடம் கொடுத்து அதை மிகவும் பிரயோசனமான வழியில் செலவிட திட்டம் தீட்டி உடனே செயல் படுத்துங்கள்.
----------------------------------------------------
அனுபவசாலிகளின் ஆலோசனைகள் :
தாங்கள் எவ்வளவுதான் , எத்தனைதான் கூட்டங்கள் கூட்டி மக்களின் ஆலோசனைகளை பெற்றாலும் செயலாற்றுவதற்கு இலகுவானது ஊழலற்ற அனுபவசாலிகளின் ஆலோசனைகளே.
ஆகையால், நம் ஊரில் உள்ள வயது முதிர்ந்த அனுபவசாலிகளான ஊழலற்ற முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறுங்கள்.
அவர்களுடைய ஆலோசனைகளை பெற்றால் - நீங்கள் எந்த அதிகாரியை பற்றியும் கவலைப்பட தேவையில்லை - உண்மையான அதிகாரிகள் உங்களுடன் இருந்து நேர்மையாக பணியாற்றுவார்கள் - உண்மையற்றவர்கள் ஊரைவிட்டு போய்விடுவார்கள்.
எனவே ஊழலற்ற அனுபவசாலிகளான பெரியவர்களின் ஆலோசனைகளை பெற முயலுங்கள்.
-----------------------------------------------------
தங்களுக்கென்று ஓர் அலுவலகம் :
நகராட்சியிலே தங்களுக்கென்று ஓர் அலுவலகம் தனியாக இருக்க வேண்டும் / நிச்சயமாக இருக்கும். அதில் தாங்கள் இருந்து செயல்பட்டால்தான் எந்த ஒரு செயலும் முழுமையடையும்.
அதல்லாது நீங்கள் பொதுவான ஓர் அறையில் இருந்து கொண்டு செயலாற்ற விரும்பினால் அது சாத்தியமாகாது.
எனவே! ஆணையரிடம் உங்களுக்கென்று ஒரு தனியறையை தயார் பண்ணித் தர சொல்லுங்கள் - நீங்கள் பெண் என்பதால் அந்த அறையில் டாய்லட் வசதி ஒன்றும், செய்து தர சொல்லுங்கள் - நீங்கள் பொது கழிப்பறைக்கு போக வேண்டியதில்லை.
இதுவெல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை - நீங்கள் பொறுப்பேற்ற உடனே இதை கேட்டு பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் உங்களுக்கென்று உள்ள சீட்டில் அமராதவரை எதுவும் உங்களைத் தேடி வராது - நகராட்சியின் அதிகாரமும், பொறுப்பும் உங்கள் கையில் இருக்க வேண்டும் என்றால் உரிமைகளை கேட்டுப் பெறவேண்டும்.
புரையோடி போன நகராட்சியை பொலிவு பெறச்செய்வது உங்கள் கையில்தான் உள்ளது.
--------------------------------------------------
எந்த ஒரு கோப்பும் :
ஏறத்தாழ மூன்று மாதமாக, வெளியே நடப்பவைகளை தங்கள் கண்ணால் நேரிடையாக பார்த்து தெரிந்து கொண்டீர்கள் - நடவடிக்கையும் எடுத்திருப்பீர்கள் - இது போதும் இப்போதைக்கு.
இனிமேல் தாங்கள் , தங்கள் சீட்டிலிருந்துதான் நகராட்சி நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் - எந்த ஒரு கோப்பும் உங்கள் டேபிலுக்கு வர வேண்டும்.
எந்த இடத்திற்கும் நீங்கள் போய் பார்க்க வேண்டியதில்லை - நகராட்சி அலுவலர்களை அனுப்பி பார்த்து , தகவல்களை தர சொல்லுங்கள்.
மிக அவசியமானது அல்லது புதினமானது என்றால் தாங்கள் நேரில் போய் பார்த்து நடப்புகளை அறியலாம் - மற்றபடி எல்லா விசயங்களுக்கும் நீங்கள் நகராட்சியை விட்டு போக வேண்டியதில்லை.
என்னுடைய எழுத்துக்கள் எதுவும் சட்டத்திற்கு புறம்பானது அல்ல - சட்டத்திற்குட்பட்டுதான் எழுதியிருக்கிறேன்.
ஆகவே இன்ஷா அல்லாஹ்! 4 ஆவது மாதம் நல்லதொரு மாற்றத்தோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கின்றோம் - இறைவனும் அருள்வான் ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross