செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை!! Kayal.TVயில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப... posted bymackie noohuthambi (kayalpatnam)[16 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15963
பட்டமளிப்பு விழா நிகழ்சிகளில் முழுமையாக கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது அல்ஹம்து லில்லாஹ். இந்த விழாவில் நடந்த சில சிறப்பு அம்சம்களை நான் இந்த இனைய தலத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பெண்கள் கூடும் இடத்தில பொதுவாகவே சப்தம் வருவதும் அடிக்கடி ஒலிவாங்கியில் அதுபற்றி அறிவித்து அவர்களை அமைதிப்படுதுவதும் வழக்கம். ஆனால் இங்கு அந்த அறிவிப்புக்கு வேலையில்லாமல் பெண்கள் மிக நிசப்தமாக இருந்தார்கள், பெண்கள் பகுதியில் அவர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகமே ஏற்பட்டது.
மேடை பேச்சாளர்களான உலமாக்கள், அறிவிப்பாளர், ஒருங்கிணைப்பாளர் எல்லோருமே குறிப்பிட்ட நேரத்தில் அவரவர்கள் பேச்சை முடித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு தரப்பட்ட தலைப்பிலிருந்து வெளியே செல்லாமல் மிக கச்சிதமாக பேசினார்கள்.
நிறைவுரை சிறப்புரை ஆற்றிய மேலப்பாளையம் சங்கை மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள், மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவி, தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய உதவி, மாணவ மாணவியர் ஆசிரியர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவி, மார்க்க அறிஞர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உதவி இவற்றை தக்க ஆதாரங்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட 55 நிமிடங்களுக்குள் மிக அற்புதமாக எடுத்துரைத்து கூட்டத்தினரை அப்படியே கட்டிப்போட்டு வைத்Aதுவிட்டார்கள்.
PIN DROP SILENCE என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் மிக அமைதியாக இருந்த அந்த வட்டாரம் ஒரு முன்னுதாரனமாக அமைந்திருந்தது.
நஹ்வி நூருல் ஹக் அவர்கள் எழுப்பிய ஒரு கேள்வி சிரிக்க வைதாலும் நம்மை சிந்திக்கவும் வைத்தது. ஹாபிள் என்பதற்கு பெண்பால் ஹாபிழா என்பதுதானா, ஆலிம் என்பதற்கு பெண்பால் ஆலிமா தானா, இரு பாலாருக்கும் அந்த ஒரே பதத்தை உச்சரிக்க அரபி இலக்கணம் என்ன சொல்கிறது என்பதை உலமாக்கள் சொல்லிதாருங்கள். ஆங்கிலத்திலே MASCULINE GENDER, FEMININE GENDER, NEUTER GENDER அல்லது COMMON GENDER என்று மூன்று வகையாக சொல்வார்கள்.
நிகழ்சிகள் இரவு ௧௦ மணிக்கெல்லாம் முடிவுற்றாது மிகவும் பாராட்டுக்குரியது. ௩ நாட்கள் நிகழ்சிகளையும் முத்தாய்ப்பு நிகழ்சிகளையும் இவ்வளவு கச்சிதமாக செய்து முடித்த விழா குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அல்ஹம்து லில்லாஹ் இந்த இளைஞர்கள் பட்டாளம் ஈசலாக புறப்பட்டு, தேநீக்களாகவும் சிற்றெறும்புகளாகவும் சுற்றி சுற்றி கலப்பநியாற்றியது வியப்பில் ஆழ்த்தியது. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross