A SOUND BODY IS A SOUND MIND ....................... ........... ..................... posted byShameemul Islam SKS (Chennai)[16 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15977
கம்ப்யூட்டர், டிவி, இன்டர்நெட், செல் போன், வீடியோ கேம் போன்ற உடல் அசைவில்லாமலும் உடலை இயக்காமலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைம் பாஸ் செய்யும் இக்காலத்தில்,
புதுப்புது நோய்கள் சொல்லாமல் பறையாமல் அனைவருள்ளும் ஆட்சி செய்வதற்கும் நம்முடைய அசைவற்ற வாழ்க்கை (SEDENTARY LIFE) தான் ஒரு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த பின்பும் சிந்திக்க மறுக்கும் இக்காலத்தில்,
பழமையாகிப்போன விளையாட்டுக்களைக் கூட புதுமையாக்கித் தருவதில் முன்னிற்கும் YUF அங்கத்தினர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
A SOUND BODY IS A SOUND MIND என ஆங்கிலத்தில் கூறுவது போல (மற்ற வகையினர் இதை வெறும் SOUND என்று மட்டும் மேலோட்டமாக விளங்கிக் கொண்டார்களோ .....???? )
மாலை வேலைகளிலும் ஓய்வு நேரங்களிலும் உற்ச்சாகமாக ஓடித் திரிந்து விளையாடுவதால் ஏனைய நேரங்களில் எதைச் செய்தாலும் அது மூளைக்குச் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருகின்றன என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள்.
இது போன்ற விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் ஏங்கி நிற்கும் இளைய சமுதாயம் வெளி நாடுகளிலும், ஏன் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் கூட வாகனங்கள் குறைவாக ஓடும் விடுமுறை நாட்களில் சாலைகளையே மைதானமாக அமைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நேற்றும் (ஞாயிற்றுக் கிழமை ) கூட சென்னையில் கண்டேன்.
அடுத்து இதை ஒரு முக்கியப் பணியாக செய்து முடித்துள்ள YUF குறித்தும் சில கருத்துக்கள்.
சிறியவர் மீது பெரியவர் காட்டும் அக்கறை தான் கூட்டு வாழ்க்கையில் எண்ணற்ற பல நன்மைகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
இம்மைதானத்தில் தொடர்புள்ளவர்களுள் அதிகமானவர் அருகிலுள்ள மத்ரஸாவில் பயிலக்கூடியவர்கள் என்பதால் மார்க்கம், ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாகிறார்கள்.
இவர்கள் பெரியவர்களானதும் இவர்கள் குடும்பம் மீதும் சமூகம் மீதும் அக்கறைக் கொண்டவர்களாகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மைகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross