செய்தி: காக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது! கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காக்கும் கரங்கள் அமைப்பு ... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[17 January 2012] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16001
காக்கும் கரத்தின் தலைவர், நிர்வாகிகள் , உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் எல்லா சேவைகளும் தொடர்ந்து ஒற்றுமையுடன் தொய்வின்றி தொடர்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.
குருதிக்கொடையில் முன்னணியிலிருக்கும் தங்கள் அமைப்பு, நம்மவர்கள் அதிகமாக நாடும் மருத்துவ மனைகள் அமைந்திருக்கும் முக்கிய நகரங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, நாகர் கோவில் இதுபோன்ற நம்மை சூழ்ந்துள்ள நகர்களில் இலகுவாக தொடர்பு கொண்டு தேவைபடுவோர் இரத்தம் பெற அந்தந்த நகரில் உள்ளவர்களை அணுகும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தால் மிகவும் வசதியாக இருக்கும்.
மேலே குறிப்பிட்ட அணைத்து நகர்களிலும் நமது சமுதாயத்தை சார்ந்தவர்களும், மாற்று சமுதாயத்தை சார்ந்த சகோதரர் களும், கல்லூரியின் மாணவர்களும் தங்களை போன்று அவர்களால் இயன்ற அளவு குருதிக் கொடையில் ஈடுபடுகிறார்கள் என்பதும், குறிப்பிடத்தக்கது.
இந்த நகர்களில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அவசர சிகிச்சைக்கு செல்லும் நம்மவர்கள் இரவு நேரங்களில் இரத்த தேவைக்கு கஷ்டப்படுகிறார்கள். ( கிடைத்தாலும் நமதூரில் இருந்து செல்லும் வரை, இரத்த வங்கி இல்லாத மருத்துவ மனைகளில் நோயாளிக்கு சிகிட்சை தாமத மாகிறது)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross