செய்தி: 09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யாவின் தொடர்முயற்சி காரணமாக, வெகுநாட்களாக சுத்தம் செய்யப்படாதிருந்த நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வஞ்சித்தவருக்கு வாழ்விலேயே கிடைக்கும் posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[20 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16074
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரி ஹைரிய்யா அவர்களின் விடா முயற்சியால் இந்த நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!.
இதனால் அந்த பகுதி மக்கள் சந்தோசம் அடைகிறார்களோ இல்லையோ! நகராட்சி அதிகாரிகள் சிறிய அளவில் சந்தோசம் அடைவார்கள் அது ஏன் என்பது அந்த அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்.
-----------------------------------------------
சுகாதார அதிகாரியின் பொறுப்பு :
மாதத்திற்கொரு முறை சுத்தம் செய்ய வேண்டியதை மாமாங்கத்திற்கு ஒருமுறைகூட சுத்தம் செய்யவில்லை என்றால் அந்த குடிநீர் எப்படி சுகாதாரமாக இருக்க முடியும்?.
சுகாதாரமில்லாத குடிநீரை அருந்தினால் மக்களுக்கு பலவிதமான நோய்களும் வரத்தானே செய்யும்!!?.
நகராட்சியில் சுகாதார அதிகாரி இருக்கிறாரா ? அவர் அவருடைய கடமையை முறையாக செய்கிறாரா ?? இன்றைய தேதி வரை யாருக்கும் அது தெரியாது! - ஏன் அவருக்கே கூட இதெல்லாம் அவருடைய பொறுப்பு என்பது தெரியாது.
------------------------------------------
நோய் வராமல் இருக்காது :
குடிநீர்த் தொட்டியின் உள்புறத்தை பாருங்கள் எவ்வளவு அழுக்கு மற்றும் பாசி படிந்திருக்கிறது என்று ?
தண்ணீர் குடிக்கும்போது ஒரு சிறய தூசி, தும்பு இருந்தால்கூட வீட்டில் உள்ளவர்களை எவ்வளவு வசை பாடுகிறோம் ? அந்த தண்ணீரை குடிக்காமல் கீழே ஊற்றுகிறோம்.
ஆனால் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை அதன் தரத்தை பற்றி யாராவது சிந்தித்தது உண்டா ?.
இந்த ஒரு தொட்டியின் அவல நிலையை பார்த்தாகிவிட்டது - மற்ற எல்லாத் தொட்டிகளும் இதை விட மோசமாகத்தான் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து அவைகளை சுத்தம் செய்ய அதிகாரிகளை வற்புறுத்துங்கள் - அவரவர் பகுதியில் உள்ள கவுன்சிலர்களை கேட்டு தொந்தரவு செய்யுங்கள்.
மேல்நிலை தொட்டியிலிருந்து வரும் நீரை எப்போதுமே கொதிக்க வைத்து ஆறிய பின்தான் குடிக்க வேண்டும் - ஆனால் இவ்வளவு மோசமான நிலையில் தொட்டி இருக்கும்போது எவ்வளவுதான் கொதிக்க வைத்து குடித்தாலும் நோய் வராமல் இருக்காது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
--------------------------------------------
தொட்டியின் " நிலை " பரிதாபத்திற்குரியது :
அந்த மேல் நிலை தொட்டியின் " நிலைமை " பரிதாபத்திற்குரியதாக " இருக்கிறது.
பாருங்கள் தொட்டியின் " உள் சுவர் " இடிந்து விழுந்து கிடப்பதை , கான்கிரிட் கம்பிகள் எல்லாம் வெளியே தெரிகிறது.
தொட்டியின் ஆயுளும் கேள்விக்குரியதே! அதை பழுது பார்க்காதிருந்தால் கம்பிகள் துருப் பிடித்து தொட்டியும் உடையும் - அந்த துரு குடிநீரில் கலக்கும் காரணமாக மக்களுக்கு வியாதியும் வரும்.
எனவே அனைத்து தொட்டிகளையும் உடனே சுத்தம் செய்ய , பழுதுபார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
--------------------------------------------
நகராட்சி நிர்வாகம் :
நகராட்சி நிர்வாகிகளே !
இந்த ஒரு தொட்டியின் நிலையை அறிந்த பின்னும் மற்ற எல்லாத் தொட்டிகளையும் போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யவில்லை என்றால் உங்களுடைய மனதை நீங்களே எடைபோட்டுக் கொள்ளுங்கள் - அது நகராட்சி ஆணையரோ, அலுவலர்களோ - நகராட்சி தலைவரோ , உறுப்பினர்களோ யாராக இருந்தாலும் சரியே!.
இறைவனுக்கு பயப்படுகிறீர்களோ இல்லையோ ? இறைவனின் தண்டனை வஞ்சித்தவருக்கு வாழ்விலேயே கிடைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross