உங்களின் கருத்துக்கள் அனைவரையும் பண்படுத்தும் அல்லவா .....?? posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[22 January 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16106
எல்லா விசயங்களையும் மிகவும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கும் உங்கள் மீதும் ,நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக .....
ஏற்கனவே நம் இருவருக்கும் இடையில் சிலமுறை கருத்து போர் நடந்துள்ளது .. இந்த தனிப்பட்ட கருதுப்போரை தடுப்பதற்காகவே நான் பல முறை உங்களின் நகர்மன்ற கருத்துகளுக்கு பதில் கூறாமலே இருந்து வந்தேன் ஆனால் நீங்கள் பிடிக்காத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் மாதிரி நகர்மன்றம் நல்ல விஷயங்கள் செய்தாலும் அதை விமர்சனம் செய்து கருத்துக்கள் தொடர்ந்து எழுதி கொண்டு வருகின்றீர்கள். எழுதுவதெல்லாம் எழுதிவிட்டு "நான் அடிக்கடி நகராட்சி நிர்வாகத்தை குறை கூறுவதாக தவறாக நினைக்க வேண்டாம்" என்று வேறு கூறி கொள்கின்றீர்கள்.
"இனிமேலாவது , செய்தி மற்றும் வாசகர் கருத்தை நன்றாக படித்து, பிறர் மனதை புண்படுத்தாமல் comments எழுதுங்கள்" என்ற உங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி அது போல தாங்களும் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இதோ நீங்கள் நல்ல கண்ணோட்டத்துடன் எழுதிய சில உங்களின் கருத்து துளிகள் .....
1) முடிவு எடுக்க தெரியாத ஒரு தலைவி , இவரை எதிர்த்து வாக்களித்த 8193 பேர் மற்றும் வாக்களிக்காத 35 சதவீதம் பேர் இப்போது சிரமப்படுகிறார்கள் - Comment Reference Number: 15413 (copy&paste)
2) சந்தோசமான செய்தி . அப்படியே தலைவிக்கும் , மன்ற உறுப்பினர்களுக்கும் சைக்கிளை கொடுத்தால் , ஊர்" வலம் " வந்து , ஊர் " நலம் " காக்க வசதியாய் இருக்கும் . -Comment Reference Number: 14671 (copy&paste)
3)சுனாமி வீடுகள் கிடைக்க உதவியாய் இருப்பேன் என்று சொல்லித்தான், அவர்களின் அன்பையும், பாசத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதெல்லாம் ஒன்றும் வாய் திறக்காத என் அருமை salih காக்கா, இப்போது ஆவேசமாக பேசுவானேன்? மொத்தத்தில் "பழம் தின்று, கொட்டை போட்ட " அரசியல்வாதிகளைஎல்லாம் மிஞ்சி விட்டார்கள் இந்த தலைவியும், அவருடைய சகாக்களும் . -Comment Reference Number: 14099 (copy&paste)
இவை எல்லாம் ஒரு சிறிய உதாரணம்தான். என் கருத்துக்கள் உங்களை மட்டும்தான் புண்படுத்தும். ஆனால் இது போன்ற உங்களின் கருத்துக்கள் அனைவரையும் பண்படுத்தும் அல்லவா.....??
உங்களின் அனுபவம்தான் என்னுடைய வயது என்பதால் இதற்கு மேலும் இந்த விவாதத்தை நான் தொடர விரும்பவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross