செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“களையிழந்து காணப்படும் கா... posted bymackie noohuthambi (kayalpatnam)[23 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16151
மக்கள் மனங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்ட நிகழ்சிகள் எரிமலைகளாய் வெடித்திருப்பதை இந்த இணையத்தளத்தில் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிகிறது.
என்னதான் காற்று வாங்க எல்லோரும் கடற்கரைக்கு போனாலும் அங்கு நடக்கின்ற அசம்பாவிதங்களை உள்வாங்கிக்கொண்டு வேதனயுடந்தான் இருந்திருக்கிறார்கள்.ஒரு கவிஞர் நமதூர் கடற்கரையை பற்றி இப்படி எழுதினார். "இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும், அலைகளின் வாயும் ஹதீஸ்கள் பேசும்".தொழுகை இபாதத் பிணக்குகளை சுமுகமாக தீர்த்து வைக்கும் பெரியவர்கள் கூட்டம் எல்லாம் ஒரு காலத்தில் நமது கடற்கரையில் நடந்திருக்கிறது. இப்போது கூட மக்ரிப் தொழுகை நேரம் எல்லோரும் எழுந்து தொழுக வந்தால் மாற்று மதத்தினர்கள் அசந்துபோவர்கள்,கொஞ்சம் யோசிக்க ஆரம்பிப்பார்கள். KAYALPATNAM BEACH USERS ASSOCIATION தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் நிலைமைகளை சீர் செய்யலாம்.எல்லா தெரு, முஹல்லா வாசிகள், சங்கங்கள், பள்ளிவாசல்கள், அரசியல் கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக இது இருந்து செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக.
நாளை மறுநாள் நகரமன்ற தலைவி அறிவித்துள்ள மக்கள் குறை கேட்கும் நாளில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக நமதூர் கடற்கரை விஷயத்தை, இன்று மக்கள் பதிவு செய்துள்ள உணர்வுகளை, தினத்தந்தி வெளிப்படுத்தியுள்ள ஆதங்கங்களை, தினமலர் வெளிப்படுத்தியுள்ள துவேஷ மனப்பான்மைகளை நன்கு பரிசீலனைக்கு எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.மனதுக்கு இதமும் நிம்மதியும் தரக்கூடிய நமது கடற்கரை அமைய இறைவன் அருள்புரிவானாக. தீய சக்திகள் தலையெடுத்து விடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross