செய்தி: நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து, நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளிடம் நகர்மன்றத் தலைவர் கருத்து கேட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகரின் முக்கிய பிரச்சினைக... posted byVilack SMA (Kayalpatnam)[23 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16155
" முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் " .
கேட்பதற்கும் , படிப்பதற்கும் மிகவும் நன்றாக உள்ளது . இதை அமுல்படுத்தும்போது மக்களின் ஒத்துழைப்பு எந்த அளவில் இருக்கும் ?
உதாரணத்திற்கு , குப்பை சேகரிக்கும் வாகனம் . அருமையான செயல் திட்டம் . ஆனால் இது முழு அளவில் வெற்றிபெறவில்லை என்றே சொல்லலாம் . ஒவ்வொரு தெருவுக்கும் , ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் இந்த வாகனம் வருகிறது . ஆனால் பெரும்பாலானோர் வாகனத்தில் குப்பையை கொட்டாமல் , வாகனம் சென்ற பிறகோ அல்லது அதற்கு முந்தைய இரவிலோ , யாருக்கும் தெரியாமல் , தெருவில் இருக்கும் வீடுகளுக்கு முன் வைத்து விட்டு செல்கின்றனர் . இது போன்று பல . நகர்மன்றம் முகதாட்சண்யம் பாறாமல் கடுமையான நடவடிக்கை எடுக்காதவரை , தலைவியின் இந்த " செயல் திட்ட ஆலோசனைகள் " , " ஏட்டுச்சுரைக்காய் " கதைதான்.
நகரில் உள்ள அனைத்து ஜமாத்துகளையும் அழைத்ததாக சொல்கிறார்கள் . ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களோ ஒருசிலரே . பெரும்பாலானோர் ஏன் புறக்கணித்தனர் ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross