செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“களையிழந்து காணப்படும் கா... posted byVilack SMA (Kayalpatnam)[24 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16160
தினமலர் செய்தியை நானும் பார்த்தேன் . அப்படி ஒன்றும் அதில் விசமத்தனம் இருப்பதாக தோன்றவில்லை .
கலாசாரம் , கட்டுப்பாடு என்று பேசுபவர்களுக்கு , என் நண்பர் ஒருவர் சொன்ன செய்தியை இங்கே தருகிறேன். சில வாரங்களுக்கு முன் , பஜாரில் இருக்கும் " அரசர் பேக்கரி " இல் , நமதூரை சேர்ந்த இளம் பெண்கள் , அங்குள்ள Dining Table இல் அமர்ந்து Pizza சாப்பிட்டதை கண்டிருக்கிறார் . எங்கே போயிற்று கலாசாரம் , கட்டுப்பாடு ?
தற்போது நமதூரின் கடற்கரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது உண்மைதான். எங்கு பார்த்தாலும் குப்பை , கூளங்கள் . சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லை . நகராட்சியின் கடுமையான கட்டுப்பாடுகள் மூலமும் , தன்னார்வ தொண்டர்கள் மூலமும் இதை நிச்சயம் சரி செய்யலாம் .
கடற்கரையில் பெருகி வரும் ஜனத்தொகையில் , தற்போது அதிமுக்கியமானது கழிப்பிட வசதி . நகராட்சி , இதில் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் , சேவை மனதுடன் செயல்பட்டால் , அனைவருக்கும் உதவியாய் இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross