CFFC - request posted bySalai Sheikh Saleem (Dubai)[15 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1623
ரஹ்மத் லில் ஆலமீன் நிர்வாக குழுவின் மேலான கவனத்திற்கு:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நீங்கள் நமது சமுதாயத்திற்காக செய்து வரும் பணிகள் மென்மேலும் சிறக்க அந்த வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும் ஆமீன்.
தற்போது நமது ஊரின் மிக முக்கியமான பிரச்சினையாகிய உயிர் கொல்லி நோயாகிய கேன்சருக்கு நமது ஊர் மிக சுலபமாக பல உயிர்களை காவு கொடுத்து வருகிற செய்தி உலகெங்கும் உள்ள காயலர்களின் நெஞ்சை உலுக்கிக்கொண்டு இருக்கிறது. நம்மவர்கள் நிறைய பேசுகிறோம், எழுதுகிறோம் ஆனால் இதுவரை இந்த வியாதிக்கு என்ன காரணம் என்று யாரிடமும் எந்த ஆதரமும் இல்லாமல் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்த ஒரு சில ஊர் நலன் விரும்பிகள் ஓன்று சேர்ந்து CANCER FACT FINDING COMMITTEE என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் செயலாக்கங்களையும் அதற்காக ஆகும் செலவீனங்களையும் எல்ல காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பி வைத்து எல்லோருடைய ஆதரவிற்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த போஸ்டிங் மூலம் நான் எல்ல காயல் நல மன்றங்களையும் தயவு செய்து இந்த விஷயமாக முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் முடிவுகள் எடுத்து இந்த CFFC கமிட்டி நல்ல விதம் செயல் பட்டு நமது சமுதாயதிற்கு தகுந்த நேரத்தில் உதவுவதற்கு உங்களின் உதவிக்கரங்களை நீட்டுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அலலாஹ் நமது சமூகத்தை எல்லா விதமான பேரபத்திலிருந்தும் காப்பாற்றுவானகும் ஆமீன்.
இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து காயல் நல மன்றங்களும் மற்றும் போது நல சேவை மன்றங்களும் தயவு செய்து ஜனாப் சாளை நவாஸ் அவர்களை கைப்பேசி எண் 9840909806 ணில் தொடர்பு கொண்டு உங்களின் ஆதரவை தெரிவித்துக்கொளுங்கள்.
இவன்
சாளை ஷேக் ஸலீம் - அமீரகம்
பாசுல் கறீம் - கத்தார்
ஒருங்கிணைப்பாளர்கள் வெளிநாட்டு காயல் நல மன்றங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross