ரஹ்மத்துன்-லில்-ஆலமீன் பொதுநலப் பேரவை மீலாது கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் 21-11-2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோல்ஷாப்பு எம்.எல்.ஸெய்யிது உமர் தலைமை தாங்கினார். அல்ஹாபிழ் இசட்.ஏ.காஜா முஹ்யித்தீன் கிராஅத் ஓதினார். இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
கருத்துரை:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ {அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பொருட்டாலும் கடந்த 26 ஆண்டுகள் பல சமூக சமுதாய நல உதவிகள் வழங்கியும், வசதியற்ற ஏழை பயனாளிகளுக்கு தங்க நகை ஆபரணம் வழங்கியும் அனைவர்களின் பாராட்டுதலையும் பொதுநலப் பேரவை பெற்றுள்ளது. இன்ஷா அல்லாஹ் இனி வரும் ஆண்டுகளில் மேற்சொன்ன சமுதாய சேவைகள் குறித்தும் உறுப்பினர்களின் கருத்துகள் ஆலோசனைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக அடுத்து மணவிழா காணும் வசதி குறைந்த குமர்களுக்கு தங்க நகை ஆபரணம் இனி வரும் ஆண்டுகளில் வழங்கபடமாட்டாது என வருத்தத்துடன் முடிவு தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக இருநபர்களுக்கு உயர்கல்விக்கான உதவி தொகை 5 வீதம் 10 ஆயிரம் உலக காயல் நலமன்றங்களின் கல்வி கூட்டமைப்பான இக்ரா மூலம் வழங்கி வருகின்றோம்.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் ஆண்டுகளில் வசதியற்ற 5 நபர்களுக்கு தலா 6 ஆயிரம் வீதம் வழங்க இருக்கின்றோம். இக்ரா மூலமாக. காயல் நகரில் செயல்பட்டு வரும் பொதுநல அமைப்புகளுக்கு முன்னோடியாக எங்களது பொதுநலப்பேரவை வழங்கி வருவது சிறப்புகுறியதாகும்.
எல்லா வகையிலும் ஆக்கமும், ஊக்கமும், ஒத்துழைப்பும் தந்த எமது கமிட்டி உறுப்பினர்கள் (வெளிநாடு வாழ்) அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம்.எஸ்.கே.முஹம்மது இபுறாஹீம் நன்றி கூறினார். மாஸ்டர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் துஆ ஓதினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் அனைவர்களும் அவரவர்களது கருத்துக்களை தெரிவித்தார்கள். மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் எங்கள் பொதுநலப் பேரியத்தின் முக்கிய நபர்களான ஹாஜி சட்னி எஸ்.ஏ.செய்யிது மீறான் அவாகளும், ஹாங்காங்கில் பணிபுரிகின்ற ஹாஜி கூஸ் முஹம்மது அப்துல் காதிர், ஹாஜி அப்துல்பத்தாஹ், சிங்கப்பூரில் பணிபுரிகின்ற ஹாஜி எம்.எம்.மொகுதூம் முஹம்மது, எம்.ஏ.கே.சேக்னா லெப்பை போன்றவர்களும் நன்கு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
இரங்கல் தீர்மானம்:
சென்ற 6 மாதத்திற்கு முன் வபாத்தான மாஸ்டர் முஹம்மது இபுறாஹீம் அவர்களுக்கும், சமீபத்தில் அகால மரணமடைந்த மாஸ்டர் கலீல் ரஹ்மான் அவர்களுக்கும், அவர்களது துணைவியார் அவர்களுக்கும், கொடிய புற்று நோயால் (கேன்சர்) சமீபத்தில் வபாத்தான அன்பு இளவல்கள் அல்ஹாஃபிழ் என்.எச்.சாஹல் ஹமீது அவர்களுக்கும், எம்.ஏ.சி.செய்யிது முஹம்மது சாலிஹ் அல்ஹாபிழ் அவாகளுக்கும் இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
|