2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலெக்டர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் பயிற்சி அளித்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்து மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடைபெறும். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை 45 நாட்கள் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இந்தப் பணியின் போது சாதாரண குடும்பம் (வீடுகளில் வசிப்பவர்கள்), நிலைய குடும்பம் (ஆஸ்பத்திரி, விடுதி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருப்பவர்கள்), வீடற்ற குடும்பங்கள் என மூன்று நிலைகளாக கணக்கெடுக்கப்படும்.
தகவல்:
தினகரன் |