காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவியருக்கு, தமிழக அரசு வழங்கும் இலவச மிதிவண்டி, 10.12.2010 அன்று காலை 10.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் கணித ஆசிரியை பீர் ஃபாத்திமா பீவி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
1. நடக்க முடியாத தூரத்தில் இல்லை posted byN.S.E.மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[17 December 2010] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1647
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மாணவிகளே! அரசாங்கம் மிதி வண்டியை மாணவிகளுக்கு இலவசமாக கொடுக்கிறதே! என்பதால்
நம் மாணவிகளும் மிதி வண்டிகளை வாங்கி உபயோகித்து கலாச்சாரத்தை சீரழிக்காதீர்கள்.
நம்முடைய ஊரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஒன்றும் நடக்க முடியாத தூரத்தில் இல்லை.
எப்படித்தான் பார்த்தாலும் , எங்கிருந்துதான் நீங்கள் வந்தாலும் ஒரு மைலுக்கு மேலே இருக்காது,
ஏன் இரண்டு மைல்தான் இருக்கட்டுமே!! அது ஒன்றும் பெரிய தூரமல்ல.
பெண்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ள முடுக்குகள் வழியாக நீங்கள் வந்தால் வெயிலும் பாதிக்காது.
சில மாணவிகள் சொல்கிறார்கள் நாங்கள் மிதி வண்டிகளை ஒட்டவில்லை. அரசாங்கம் நம்முடைய வரி பணத்திலிருந்துதானே தருகிறது அதனால் அதை வாங்கி எங்கள் அண்ணன் , தம்பிக்கு கொடுக்கிறோம் என்று.
இதுவும் தவறுதான் நீங்கள் உபயோகப்படுத்தாத பொருளை ஏன் வாங்கணும், அதற்கு பதிலாக
உங்கள் உபயோகத்துக்கான வேறு எந்த பொருளையோ அல்லது வேறு ஏதும் சலுகையையோ கேட்டு வாங்கலாமே.
அண்ணன், தம்பிக்கு என்று மிதிவண்டி வாங்குவீர்கள் அதன் பின் தோழி ஒட்டுகிறாளே! என்று
ஓட்டத் தொடங்கி அது எல்லோருக்கும் பழக்க, வழக்கமாகி கலாச்சார சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.
அதனால் அந்த மிதி வண்டியை வாங்காமலே இருப்பது சிறந்தது.
----------------------------------
மாணவிகளே! ஒழுக்கத்தை பேணி நடக்கவேண்டும் என்றால் சில சமயங்களில், சில விசயங்களில்
விட்டுக்கொடுத்துதான் போக வேண்டியதாக இருக்கும்.
எனவே நீங்கள் நல்ல திறமையாக படிக்கிறீர்கள் மாஷா அல்லாஹ்!
மாணவர்களைவிட திறமையை
அதிகரிக்க போட்டிப் போடுகிறீர்கள்.
இருந்தாலும் பெண்ணுக்குரிய பண்பாட்டை மறந்து விடாதீர்கள். எந்த அளவுக்கு அறிவை வளர்க்கிறீர்களோ? அந்த அளவுக்கு பண்பாட்டையும் வளருங்கள்! நல்ல சமுதாயத்தை உருவாக்க
முடியும்!!.
நீங்கள் எல்லோரும் கல்வியிலேயும் , பண்பாட்டிலேயும் சிறந்து விளங்கி நல்லதொரு வாழ்வு அமைய
எல்லாம் வல்ல அல்லாஹ் இடம் வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross