இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் பொருளாளராக இருந்த எஸ்.எம்.கே.மஹ்மூத் லெப்பை அவர்களின் சகோதரரும், அவருக்குப் பிறகு முஸ்லிம் லீக் மாநில பொருளாளராகப் பணியாற்றியவரும், முன்னாள் காயல்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி மன்றத்தின் முஸ்லிம் லீக் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினருமான, காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.எம்.கே.முஹம்மத் அப்துல் காதிர், 15.12.2010 அன்று இரவு காலமானார். அவருக்கு வயது 74.
நேற்று (16.12.2010) காலை 11.00 மணிக்கு அவரது ஜனாஸா, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார்.
நல்லடக்கத்திற்குப் பின், நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், குத்பா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் முஸ்லிம் லீக் உறுப்பினருமான நெல்லை கோதர் முகைதீன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, இரங்கல் உரையாற்றினார்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் நிர்வாகிகளான ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, ஹாஜி பிரபுத்தம்பி, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஆகியோரும்,
ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளரும், சென்ட்ரல் பள்ளிகளின் தாளாளருமான ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம்,
சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் பொருளாளர் நயீமுல்லாஹ், ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ், தி,மு.க. நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நிர்வாகி கே.ஜே.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோரும்,
எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், கே.எம்.டி.சுலைமான், மொகுதூம் கண்டு சாஹிப், ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக், எம்.ஏ.ஹஸன், மஹ்மூத் லெப்பை, எஸ்.டி.கமால், ஜே.உமர் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட - நகர, முன்னாள்-இந்நாள் நிர்வாகிகளும், நகரின் அனைத்து ஜமாஅத்துகளைச் சார்ந்த பொதுமக்களும் இந்நல்லடக்கத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நிறுவிய காயிதெமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிபுடன், மறைந்த ஹாஜி எஸ்.எம்.கே.முஹம்மத் அப்துல் காதிர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் படங்கள் பின்வருமாறு:-
|