காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவியருக்கு, தமிழக அரசு வழங்கும் இலவச மிதிவண்டி, 0612.2010 அன்று காலை 10.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில் வழங்கப்பட்டது.
அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 136 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை தலைமையில், ஆசிரியையர் செய்திருந்தனர். |