காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலுள்ள ஐசிஐசிஐ வங்கியின் ஏ.டி.எம். கருவி அண்மையில் செயலற்றிருந்தது.
இதுகுறித்து, அந்த வங்கியின் காயல்பட்டினம் கிளை மேலாளர் ஏ.ஜே.ஜெகன்நாத்திடம் விசாரித்தபோது, கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலுள்ள ஏ.டி.எம். கருவிகள் தகவல் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலற்றிருந்ததாகவும், அந்த வரிசையில் காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெரு ஏ.டி.எம். கருவியும் செயலற்றுப் போனதாகவும் தெரிவித்த அவர்,
அதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் மதுரைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதெனவும், அங்கிருந்து தொழில்நுட்ப வல்லுனர் வந்து, கருவியிலேற்பட்ட குறைகளை நீக்கி மீண்டும் செயல்படச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். |