காயல்பட்டணம் கடற்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காயல்பட்டணம் கொம்புத்துறை கடற்கரைக்கு வடபுறம் சுமார் 2 கி.மீ. தூரத்தில் கழிமுகம் உள்ளது. இதன் அருகில் கூரை செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து காயல்பட்டணம் தென்பாகம் விஏஓ., செல்வலிங்கம் ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross