பருப்பு, எண்ணெய் வகைகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதால் பொதுமக்கள் அக்மார்க் முத்திரை பதித்த பொருட்களையே வாங்கி பயன்படுத்துமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) பொன்னுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது சந்தை மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் பல்வேறு வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக தெரியவந்தள்ளது. உதாரணமாக துவரம் பருப்பில் கேசரி பருப்பு கலக்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு முடக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் எண்ணெய் வகைகளில் தரமற்ற விலை குறைந்த எண்ணெய் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் பார்வைக்குறைவு, இருதய கோளாறு முதலியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மசாலா பொடிகளில் நிறத்தை கூட்டுவதற்காக செயற்கை வண்ணங்கள் கலப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. எனவே அக்மார்க் ஆய்வகத்தில் விஞ்ஞான முறையில் பரிசோதித்து அக்மார்க் தரச்சான்று வழங்கப்பட்டு அக்மார்க் அரசு முத்திரையுடன் கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களையே பொதுமக்கள் கேட்டு வாங்கி உபயோகிக்க கேட்டுக்கொள்கிறேன்.
1. கலப்படம் ஒரு கலக்கல் posted bySalai Sheikh Saleem (Dubai)[15 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1625
அன்பு காயலர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
தயவு செய்து கலப்பட உணவுப்பொருட்களை நாடாதீர்கள். நமது ஊரில் விலை மலிவாக தருகிறோம் என்று மனித குலத்திற்கே ஒவ்வாத சில உணவு பொருட்கள் நமதூரில் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். எனக்கு கிடைத்த தகவல் படி நமதூரில் சில்லறையில் விற்பனையாகும் சமையல் எண்ணையில் கலப்படமாகும் ஒரு விதமான எண்ணெய், நமதூரில் நடமாறும் கேன்சர் வியாதிக்கு முக்கிய கரணம் என்று நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருக்கும் DCW வெளியேற்றும் கழிவுகளை விட 150 விழுக்காடு சுகாதார கேடு விளைவிக்கும் அளவிற்கு மோசமானது. சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிப்பே செய்ய முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்த எண்ணெய்தான் நமதூரில் கலப்படம் செய்கிறார்கள். மேலும் ஏரலில் இருந்து கொண்டு வரப்படும் நெய் கூட இதே மாதிரித்தான் கலப்படம் செய்யப்படுகிறதாக அறிகிறேன்.
சுவர் இருந்தால் தன சித்திரம் என்பதிற்கிணங்க நம் தேக ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் நமக்கி எல்லாமே என்று உங்களை சீப்பாக கிடைக்கும் கலப்பட சாமான்களை தயவு செய்து வாங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross