ஒரு மொபைல் சேவை நிறுவனத்திலிருந்து மற்றொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாறும் போது சந்தாதாரர் தங்கள் மொபைல் எண்ணை
தக்கவைத்துக்கொள்ளும் வசதி (MOBILE NUMBER PORTABILITY) நவம்பர் 25 அன்று ஹரியானா மாநிலம் ரோஹ்டக் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் இவ்வசதி ஜனவரி 20 (2011) முதல் அறிமுகப்படுத்தப்படும்.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறையை இந்திய தொலைப்பேசி துறை கண்காணிப்பு அமைப்பு (TRAI) விளக்கியுள்ளது. இத்தகவலை மத்திய
தொலைதொடர்பு துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் நேற்று லோக் சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மாற்றம் செய்யும் சந்தாதாரர் குறைந்தது மூன்று மாதமாவது பழைய நிறுவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.
புதிய நிறுவனத்திற்கு மாற விரும்பும் சந்தாதாரர் - தற்போது இருக்கும் நிறுவன தொடர்பிலிருந்து 1900 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். பதிலாக Unique Porting Code (UPC) எண் - SMS மூலமே வரும்.
புதிய நிறுவனத்தின் விண்ணப்பம் நிரப்பும் போது SMS மூலம் பெறப்பட்ட அந்த Unique Porting Code (UPC) எண்ணை குறிப்பிடவேண்டும். புதிய நிறுவனம் மாற்ற சேவைக்காக கூடியதாக ரூபாய் 19 வரை வசூலிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பில் பெரும் சந்தாதாரர்கள் (Post Paid Subscribers) சேவை மாற்றம் செய்யும்போது தங்களின் அனைத்து பாக்கியையும் கட்டியிருக்க வேண்டும்.
Pre Paid Subscribers உடைய எஞ்சிய தொகை (Balance) - புது நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படாது.
விண்ணப்பம் அளித்த ஏழு நாட்களுக்குள் சேவை மாற்றம் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
1. Better late than never posted byA.W.S. (Kayalpatnam)[15 December 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 1615
Nearly 10 years after the introduction of cellular phone, our DOT has introduced this service. All these years our government allows service providers to loot the customers as they wish. Introduction of this service will bring some competitiveness among service providers. Sub-standard service providers will lose their customers to competitors for sure and the companies provide best service and better tariff rate will survive.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross