காலம்:10.12.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி அளவில்
கிராஅத்:எஸ். எம். சித்தி மஹ்பூலா. த/பெ ஏ. எச். செய்யது முகியத்தீன்
தலைமை:ஜனாப் அல்ஹாஜ். எஸ். மஹ்முது நெய்னா (தலைவர் பக்வா)
வரவேற்புரை : ஜனாப் கே. எம். அபூபக்கர் (செயற்குழு உறுப்பினர் பக்வா)
ஜனாப் கே. எம். அபூபக்கர் அனைவர்களையும் வரவேற்றார்.(உறுப்பினர்கள், விருந்தினர்கள் மற்றும் குடும்பத்தார்கள்) அனைவர்களும் அவரவர்களின் வேலை சுமையையும் பாராமல் எங்களின் மேலான அழைப்பை மதித்து இந்நிகழ்ச்சிக்கு வந்து கலந்து சிறப்பிக்க வந்ததை அழகாக வர்ணித்தார்கள்.
அறிமுகவுரை :ஜனாப் எம். ஹெச். நளீர் அஹ்மது (துணை செயலாளர் பக்வா)
மன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்கள். ஜனாப் எஸ். எம். அகமது சுலைமான் (செயலாளர் பக்வா) அவர்கள் இடம் மாற்றம் காரணமாக சென்று விட்டதால் புதிய செயலாளர், பொருளாளர்; மற்றும் துணை பொருளாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
தலைவர் உரை :
ஜனாப் எஸ். எம். அகமது சுலைமான் (செயலாளர் பக்வா)அவர்களின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள். அவர்களின் செயல்பாடு மேன்மேலும் நமது மன்றத்திற்கு தேவை என்றும் அவர்கள் தற்போதும் நமது மனறத்துடன் தொடர்புடன் உள்ளதையும் நினைவு கூறினார்கள். மேலும் முக்கியமாக கேன்சர் பற்றிய காரணங்கள் மற்றும் அதன் விளிப்புணர்வுகளை முதலில் நமது மன்ற உறுப்பினர்களும் மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தார்களின் மத்தியிலும் எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்கள். அத்துடன் மற்ற மக்கள் மத்தியிலும் முடிந்த அளவு எடுத்துரைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது கத்தர் மன்றத்தின் மூலமாக கேன்சர் விளிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதையும் நினைவு கூறினார்கள். பஹ்ரைனில் புதிய உறுப்பினர்களை அதிகரிக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்த முயற்சி செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் நமது மன்ற உறுப்பினர் ஜனாப். சாலிஹ் காக்கா அவர்களும் தமது அறிவுரைகளை சொன்னார்கள்.
தீர்மானங்கள் :
1. புதிய செயலாளராக ஜனாப். ஏ. எச். செய்யது முகியத்தீன் அவர்களையும்
2. பொருளாளராக ஜனாப் வி.எஸ்.எஸ். ஜாஹிர் உசேன் அவர்களையும், மற்றும்
3. துணை பொருளாளராக ஜனாப் எம். சம்சுதீன் அவர்களையும் ஏகமனதாக தேர்ந்தெடுத்தார்கள்.
4. இக்ராவிற்கு வாக்களித்தபடி நாற்காலிகள் கொடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான செலவுகளை தலைவரே ஏற்றுக் கொண்டார்.
கடைசியாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மூவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
அனைவர்களுக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டு துஆ உடன் இனிதே கூட்டம் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்.
3. வாழ்த்துக்கள் posted byJiyaudeen (Al-Khobar,K.S.A)[14 December 2010] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1600
அனைத்து புதிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். சொந்தம் மற்றும் நண்பர்களை இப்படி நல்ல நிகழ்ச்சிகளின் போட்டோவில் தான் பார்க்க முடிகிறது. குறிப்பாக செய்து முகைதீன், அவரின் மகள், நளீர் அஹ்மத், ஜாகிர் ஹுசைன் ...மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்தி துஆ செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross