கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 03.12.2010 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து அன்றிரவு, மன்ற செயற்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளும் குடும்பங்கள் சங்கமம், மன்றப் பொருளாளர் எம்.ஆர்.ஷாஹுல் ஹமீத் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சங்கமத்தில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சூட்டுக்கறி (பார்பிக்யூ) பரிமாறப்பட்டது.
காயலர்கள் அல்லாத - தமிழகத்தைச் சார்ந்த இதர ஊர்களிலிருந்து மன்றத்தின் கவுரவ உறுப்பினர்களாக உள்ளோரும் இச்சங்கமத்தில் தம் குடும்பத்தினருடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
முஹம்மத் யூனுஸ்,
துணைத்தலைவர்,
கத்தர் காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர். |