கீழக்கரை தொழிலதிபர் டாக்டர் B.S. அப்துர் ரஹ்மான் அவர்களால் நிறுவப்பட்டு, All India Islamic Foundation மூலம் சென்னை வண்டலூரில் நடத்தப்படும், கீழக்கரை புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரியின் "Al Aalim Al Bukhari" சனத் - பட்டமளிப்பு நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 11) காலை 11:00 மணிக்கு B.S.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலை அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காயலர்கள் 4 பேர் உட்பட 55 பேர் பட்டம் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மௌலானா முனைவர் ஹுசைன் மதவூர் (முதல்வர், ரவ்லத்துல் உலூம் அரபிக் கல்லூரி, பாரூக் கல்லூரி, கோழிக்கோடு, கேரளா) கலந்து கொண்டார். மௌலானா T.J.M. சலாஹுதீன் ரியாஜி ஹழ்ரத் (தலைவர், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை - முதல்வர், அல்ஹசநாத் அல்ஜாரியாத் அரபிக் கல்லூரி, பேட்டை, திருநெல்வேலி) பட்டமளிப்பு விழா பேருரை வழங்கினார்.
கல்லூரியின் செயலாளர் P.S.M. செய்யத் அப்துல் காதிர், பொருளாளர் M.K.M. ஹசன், தாளாளர் அஷ்ரப் அப்துர் ரஹ்மான் புகாரி மற்றும் முதல்வர் P.S. செய்யத் மஸ்வூது ஜமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டம் பெற்ற காயலர்களின் விபரம் வருமாறு:-
2004 - 2009 பிரிவு
(1) அப்சல் உலமா மௌலவி அல் ஹாபிழ் K.M.A.K. முஹம்மது அபூபக்கர் அல் புகாரி B.B.A. (தந்தை பெயர்: K.M.A. அப்துல் காதர்)
(2) அப்சல் உலமா மௌலவி M.Y. பயாஸ் அல் புகாரி B.B.A. (தந்தை பெயர்: K.M. யூசுப்)
2005 - 2010 பிரிவு
(1) அப்சல் உலமா மௌலவி அல் ஹாபிழ் B.A. செய்யத் முஹம்மது அப்சல் அல் புகாரி B.B.A. (தந்தை பெயர்: S.M. பசீர் அஹ்மத்)
(2) அப்சல் உலமா மௌலவி அல் ஹாபிழ் A.W. அப்துல் காதர் அல் புகாரி B.B.A. (தந்தை பெயர்: M.A. அப்துல் வதூத்)
ஆண்டுவாரியாக பட்டம் பெற்றோர் முழு விபரம்:-
தகவல்:
அல் ஹாபிழ் A.W. முஹம்மது அப்துல் காதர் அல் புகாரி |