காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள உப்பளத்தில் உள்ள 4 மின்கம்பங்கள் நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்ததால் ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் ஆறுமுகநேரியில் நேற்றுமாலை திடீரென சூறாவளி காற்றுடன் 10 நிமிடங்கள் மழை கொட்டியது. தொடர்மழையால் ஆறுமுகநேரி&காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள உப்பளத்தில் உள்ள 4 மின் கம்பங்கள் நேற்றுமாலை 4.45 மணியளவில் சரிந்து விழுந்தன.
இந்த நான்கு மின் கம்பங்களும் திருச்செந்தூருக்கு மின்சாரம் செல்லும் மெயின் லைனாகும். இதனால் திருச்செந்தூர் பகுதியில் நேற்று மாலையிலிருந்து மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் மின் கம்பத்தை சரிபார்க்கும் பணியில் மின்ஊழியர்கள் ஈடுப்பட்டனர். ஆறுமுகநேரி நேற்றுமதியம் 2.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த தொடர் மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
1. மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கு posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[11 December 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1572
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இதிலே உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் காப்பாற்றிய இறைவனுக்கே எல்லாப்புகழும்.
கடும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கு யாரையும் குறைக்கூற முடியாது.
இருந்தாலும் இது மெயின் லைன் என்பதால் மிகப்பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள்
இருக்கின்றன.
அதனால் மின்சார வாரியம் இது போன்ற மின் கம்பங்களை மிக உறுதி வாய்ந்ததாக அமைப்பதுடன்,
முறையான பராமரிப்புகளும் செய்து வருவது பிற்காலத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கும்.
3. Result posted byRiyath (Hong Kong)[12 December 2010] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1576
This is the outcome of non maintanance.
As our electrical department knows this is the main line for Kayal and Chendur then how come they did not check these posts regularly or atleast before rainy season begins.
Accidents could avoid always if the maintanance is good.
We have monthly,weekly,daily current cut in our town, though we are not checking the connection lines. This is shamefull.. sorry to say this.
Be prepare a plan for maintance if install any public properties.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross