சேலன்ஞ் லீக் 2010-11 என்ற பெயரில், ஹாங்காங் க்ரிக்கெட் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட க்ரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஓராட்டத்தில் காயல் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி வெற்றி பெற்றது.
காயல்பட்டினத்தின் ஹமீத் முஹம்மத் (அணித்தலைவர்), ஹபீப் ரஹ்மான் (அணி துணைத்தலைவர்), மக்பூல், இஸ்மாஈல், வாவு யாஸிர் அரஃபாத், மழ்ஹர், வாவு இப்றாஹீம், யு.ஷேக்னா, யு.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.நூஹ், ஜூனியர் நூஹ், வாவு ஹமீத் (WMAS), வாவு மொகுதூம் ஜூனியர், உடன்குடியைச் சார்ந்த முஷ்தாக், அஜ்மல் ஆகியோரையும் உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் (MCC) அணி மிட் லெவல்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸில் வென்ற எம்.சி.சி. அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 28 ஓவர்களில் அந்த அணி அனைத்து வீரர்களையும் இழந்து 247 ஓட்டங்கள் பெற்றது. தொடர்ந்தாடிய மிட் லெவல்ஸ் அணி, 25 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 162 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதன்மூலம் எம்.சி.சி. அணி அப்போட்டியில் வெற்றி பெற்றது.
மொத்தம் 14 அணிகள் கலந்துகொள்ளும் இச்சுற்றுப்போட்டியில், பிரிவொன்றுக்கு 07 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு, அவ்வணிகளுக்கிடையே முதற்கட்ட சுற்றுப்போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகிறது.
முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நாக்அவுட் முறையில் இரண்டாம் கட்ட போட்டியில் விளையாடி, இறுதிப்போட்டியில் வெல்லும் அணி கோப்பையைத் தட்டிச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
MCC News Administrator மூலமாக,
மொகுதூம்,
கவ்லூன், ஹாங்காங். |