Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:55:46 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5262
#KOTW5262
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 13, 2010
முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழக முதல்வர் உரை! பல கோரிக்கைகளை மேடையிலேயே ஏற்றார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3874 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு 11.12.2010 அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் இறுதியில் ஏற்புரையாற்றிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இத்தீர்மானங்களில் வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம் அமைத்தல், உர்தூ மொழியை பாது காக்க உரிய ஏற்பாடுகளை செய்தல், தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைக்க முயற்சி எடுத்தல், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல அறிவிப்புகளை அவர் தனதுரையில் வெளியிட்டார். அவரது உரை விபரம் பின்வருமாறு:-

கடல் போன்று இந்த மைதானத்தில் திரண்டிருக்கும் காயிதெ மில்லத்தின் வழிவந்தோர்களான உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ளவும், நீங்கள் வழங்குகின்ற விருதினைப் பெற்றுக் கொள்ளும் அருமையான வாய்ப்பு ஒன்றைப் பெற்றமைக்காக மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எல்லையில்லா இன்பத்தால் என் உள்ளம் துள்ளுகிறதே இந்நாளில்! தி.மு. கழகமும் இஸ்லாமியர்களுடைய பாசறையாக விளங்குகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக நெருங்கிய உறவு கொண்ட சமுதாய, அரசியல் பேரியக்கங்கள் என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள்.

இங்கே நம்முடைய விழாத் தலைவர் - மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பட்டத்தை, விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார்கள். அந்த விருதைப் பெறும்போது, எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன் நான் என்ற வரியை அந்த வாழ்த்திலே வார்த்தையாக பொறித்திருக்கிறார்கள். அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் அந்த வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் (பலத்த கைத்தட்டல்) என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னு டைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார் களோ - என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது.

பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் - மன்னிக்க முடியாத குற்றம். அந்தக் குற்றத்தைச் செய்து எனக்கு இந்த விருதினை வழங்கியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது என்பது எனக்குத் தெரியும். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை அவர் நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல - படித்து முடித்த பிறகும்கூட - எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா; என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒருவேளை அவர் இன்னொரு விழா நடத்தி அதில் காயிதே மில்லத்தினுடைய பெயரையும் சேர்த்து உங்களுக்கு வழங்குகிறோம் வாரீர் என்று சொன்னாலும் சொல்லுவார். காயிதே மில்லத்தினுடைய பெயரை சேர்ப்பதாக இருந்தால், இன்னொரு விழா அல்ல - இன்னும் நூறு விழாக்கள் நடத்தினாலும் நான் வருவதற்குத் தயாராக இருப்பவன். அந்த அளவுக்கு காயிதேமில்லத் அவர்களிடத்திலே அன்பு - அவரிடத்திலே பற்று - பாசம் இவற்றை பெரியார் காலத்திலிருந்து நாங்கள் கொண்டவர்கள்.

“உருது” மொழிக்கு சிறப்புச் சேர்க்க முயற்சிகளை மேற்கொள்வேன்!

இந்த மாநாட்டில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். மாநாட்டுத் தலைவர் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையோடுதான் நீங்கள் இந்தத் தீர்மானங்களையெல்லாம் இன்றைக்கு எனக்கு அளித்திருக்கிறீர்கள்.

முதல் தீர்மானம் - சமச்சீர் கல்வியில் உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற தீர்மானமாகும். மொழிக்கு பாதுகாப்பு வேண்டும். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருந்த இயக்கம் இந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்படி எங்கள் மொழிக்கு நாங்கள் போராடி வெற்றி கண்டபோது, இது உங்கள் மொழி என்று சொல்ல மாட்டேன். நமது மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்கு உரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு அல்ல - இன்றைக்கு இந்த அரசு இருக்கலாம், நாளைக்கு வேறு அரசு வரலாம்.

(“நீங்கள் தான் முதல்வராக வருவீர்கள்” என்று கூட்டத்திலிருந்து குரல்!) அது உங்களுடைய ஆசை. 40 ஆண்டுகள் நான்தான் முதலமைச்சராக இருப்பேன் என்று இங்கே மாநாட்டுத் தலைவர் "சாபம்" கூட (?) விட்டார். நான் அதை சாபமாகத்தான் கருதுகிறேன். 40 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும் - படாதபாடுபட வேண்டும் என்று நம்முடைய மாநாட்டினுடைய தலைவர் அவர்கள் விரும்புகிறார் என்றால், நான் என்ன சொல்வது?

இன்னும் 40 ஆண்டுகள். இயற்கை இடம் கொடுத்தால்கூட, என்னுடைய இதயம் இடம் கொடுக்காது. ஏனென்றால், ஐந்து முறை - இது ஐந்தாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த காலகட்டத்தில், ஏறத்தாழ எனது 70 ஆண்டுகால பொது வாழ்வில் ஒரு 50 அல்லது 60 ஆண்டு காலம் அரசியலிலே பிணைந்திருந்து, அரசியலிலே கலந்திருந்து, ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து, எதிர்க்கட்சியிலே வீற்றிருந்து மக்கள் பணி ஆற்றியிருக்கின்றேன்.

இந்த காலகட்டத்தில் நான் நல்லவர்களையும் சந்தித்திருக்கிறேன் - நல்லவர் அல்லாதவர்களையும் சந்தித்திருக்கிறேன். நான் நன்றி உள்ளவர்களையும் சந்தித்திருக்கிறேன். நன்றி என்றால் எந்த சந்தையில் விற்கும் என்று கேட்பவர்களையும் சந்தித்திருக்கின்றேன். அதனால், என்னை நீங்கள் வாழ்த்தினாலும் சரி - என்னை நீங்கள் பாராட்டினாலும் சரி - அதற்கு நான் தகுதி உடையவன் என்றால், ஏற்றுக் கொள்கின்றேன்.

அதே நேரத்தில், என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே என்றால், இயலாது - இயற்கை இடம் தராது - இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன். ஏனென்றால், நன்றியுள்ள சமுதாயம் இது. அது வேடிக்கைக்காகவோ அல்லது கிண்டலுக்காகவோ - கேலிக்காகவோ சொல்லவில்லை.

எனவேதான், இங்கே சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள் - கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது. அதிலே ஒரு கோரிக்கைதான் - உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை.

உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் 2010-2011 கல்வியாண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் 10 வகுப்புகளில் சிறுபான்மை மொழி பாடமாகச் சேர்க்கக் கோரி சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

இது தொடர்பாக, சிறுபான்மை மொழி பிரதிநிதிகளுடன் விவாதம் நடத்துவது குறித்து தேசிய சிறுபான்மைக் குழுமத்திடமிருந்து அறிவுரை பெறப்பட்டதன் அடிப்படையில் 27.10.2010 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட பொதுகருத்துக்கள்; பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பிப்பதற்கு 4 பாட வேளைகள் ஒதுக்கீடு செய்தல்; அனைத்து மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநுhல்கள் தயாரித்தல்; சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடத்துதல்; மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண் இடம் பெறச் செய்தல் - இதன்மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த மாநாட்டிலே தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)

“வெளிநாடுவாழ் தமிழர்கள் நலவாரியம்” ஏற்படுத்தப்படும்!

தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள். அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், மத்தியிலும், கேரளா போன்ற மாநிலங்களிலும் இருப்பதைப் போல் வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்காக தனித்துறையை ஏற்படுத்தக் கோருகின்ற ஒரு தீர்மானம் - அல்லது கோரிக்கை.

இதற்கு நான் தருகின்ற விளக்கம் - தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணி புரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை களில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, “அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்” எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டிலே வாழும் தமிழர்களின் நலனுக்காக, திராவிட முன்னேற்றக் கழக அரசு - இன்றல்ல, அரசுக் கட்டிலிலே வீற்றிருப்பதற்கு முன்பே, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே, வெளிநாட்டிலே, குறிப்பாக - இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்காக, அவர்களுடைய உரிமைகளுக்காக முதல் குரல் கொடுத்ததே திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இன்னும் சொல்லப் போனால், முதல் குரல் கொடுத்த ஈழத் தந்தை செல்வநாயகத்தின் பக்கம் நின்று, தொடர்ந்து குரல் கொடுத்தவன் இந்தக் கருணாநிதி என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே, வெளிநாட்டிலே இருக்கின்ற - இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் - அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் – “அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்” எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத் தின்கீழ், “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.

தமிழகத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளையை ஏற்படுத்த வலியுறுத்தப்படும்!

உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங் களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் - வெற்றி பெறுவோம் (கைதட்டல்) என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் நூல்கள் நாட்டுடமை!

“தமிழக அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பணிபுரிந்து, படைப்பிலக்கியங்களை உருவாக்கியுள்ள முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீக அறிஞர்கள் ஆகியோரின் படைப்புகளையெல்லாம் தொகுப்பதற்கும் அவற்றில் சிறந்தோங்கி நிற்கும் அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கும் தமிழக முதல்வர் அவர்களிடம் இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது” என்று ஒரு தீர்மானம். அதைப் பற்றிய விளக்கம்...

தமிழக அரசு தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்களைக் கண்டறிந்து அவர்களின் நூல்களை நாட்டு டைமையாக்கி, அவர்கள் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகை வழங்கி வருகிறது. இவ்வகையில் திரு. கா.மு. ஷெரிப், புலவர் முகம்மது நயினா மரைக்காயர் ஆகியோரின் மரபுரிமையர் களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய்; புலவர் குலாம் காதிறு நாவலரின் மரபுரிமையர்க்கு 6 இலட்சம் ரூபாய்; சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், திரு. மணவை முஸ்தபா ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாய்; டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் மரபுரிமையர்க்கு 7 இலட்சம் ரூபாய் என மொத்தம் 43 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டு; 6 முஸ்லிம் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மேலும் கோரிக்கைகள் வரப்பெறுமாயின் அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாம்பரம் சிறுவியாபாரிகளுக்கு மாற்று இடம்:

தாம்பரம் மேம்பாலம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அனைத்து சிறுகடைகளையும் அப்புறப்படுத் தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுகடை வியாபாரிகளுக்கு நல வாரியம் அமைத்து பேருதவி புரிந்த மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இதில் தலையிட்டு இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி சாலையோர, சிறுகடை வியாபாரிகள் வாழ்வில் ஒளியேற்ற இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று ஒரு தீர்மானம்.

இதுபற்றி - தாம்பரம் மேம்பாலம் சாலை விரிவாக்கத் தின்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை, சாலை ஒரங்களில் உள்ள சிறு கடைகள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டால், இந்த சிறுகடை வியாபாரிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து தனியே பரிசீலனை செய்யப்படும். (கைதட்டல்) என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாம்பரம் சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர சிறுகடை வியாபாரிகளின் துயர்துடைக்க அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுத் தெரிவித்தால், தேவைப்படும் நிலத்தின் அளவு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து, முடிவு செய்து, அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து, அவர்கள் எந்தவித சிரமமுமின்றி வியாபாரம் செய்ய, தாம்பரம் நகராட்சியின் மூலம் கடைகளைக் கட்டி பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்!

நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளையேற்று சிறுபான்மை சமுதாயத்திற்கு, குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்திற்கு பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். நல்ல காலம் - மாநில அரசை வலியுறுத்தவில்லை.

மதம் மற்றும் மொழி வழி சிறுபான்மையினரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரை இனம் கண்டறிவதற்கான அளவுகோல்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல் - இவைகளுக்காக மிஸ்ரா கமிஷன் பத்து சதவிகிதம் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. அந்தப் பரிந்துரையை நிறை வேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

இப்போது முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடாக தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டிருப்பது 3.5 சதவிகிதம். பத்து சத விகிதத்தை மத்திய அரசு கொடுக்குமேயானால், அந்த பத்து சதவிகிதத்திற்குள் இந்த 3.5 சதவிகிதமும் இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகவே பத்து சதவிகிதத்திற்காகவும் நாம் அணி வகுப்போம். அந்த அணி வகுப்பில் வெற்றி பெற்றால் பத்துக்குள் ஐந்து கிடைக்கும், அதையும் பெற்றுக் கொள்வோம். “சட்டியிலே இருந்தால் தான் அகப்பையிலே வரும்” என்ற பழமொழியை சாதாரணப் பெண்கள் கூடச் சொல்வார்கள். அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். பத்து கிடைத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம், பெருமை அடைவோம். பரவாயில்லை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டிலே நிறை வேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்று நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். அந்த மகிழ்ச்சியை இந்த மாநாட்டிலே கலந்து கொண்டிருக் கின்ற உங்களுக்கும் எங்களுக்கும் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கின்றது.

மதவாத சக்திகளை தொடர்ந்து எதிர்ப்போம்!

எனவே திராவிட முன்னேற்றக் கழகமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தோழமைக் கட்சிகள். இங்கே ஒரு நண்பர் பேசியதைப் போல இடையிலே பாரதிய ஜனதா கட்சியோடு நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட, நானும் அந்த அணியிலே அன்றைக்கு இடம் பெற்றிருந்த மற்ற கட்சிக்காரர்களும், வாஜ்பாய் அவர்களிடத்திலே சொல்லி உயர்ந்தபட்ச கோரிக்கை, குறைந்தபட்ச கோரிக்கை என்றெல்லாம் இருக்கின்ற அந்தக் கோரிக்கைகளில் நாங்கள் உங்களிடம் வைக்கின்ற குறைந்தபட்ச கோரிக்கை என்னவென்றால், குறைந்தபட்ச திட்டம் என்னவென்றால், மத மாச்சர்யங்கள் இல்லாத, மத பேதமில்லாத மத உணர்வில்லாத, அரசாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதைத்தான் குறைந்த பட்ச கோரிக்கையாக வைத்தோம். அது, நிறைவேறி நடைமுறையில் இருந்த வரையில் நாங்கள் பாரதிய ஜனதா அரசோடு, ஒட்டிக் கொண்டிருந்தோம்.

அதிலேயிருந்து அவர்கள் தவறி மறுபடியும் பாபர் மசூதி, இடிப்பு மறுபடியும் மதவாதம், மறுபடியும் ஜாதி பேதம் என்ற உணர்வுகளுக்கு அவர்கள் அடிமையானபோது, “இங்கே எங்களுக்கு இனி வேலையில்லை” என்று அன்றைக்கே வெளியே வந்து விட்டோம்.

இதை நான் சொல்வதற்குக் காரணம், நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு ஒட்டிக் கொண்டு, அணி வகுத்த நேரத்தில், சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், எனக்கு முன்னால் பேசிய ஒரு நண்பர், தேசிய கட்சியில் தொடர்புடையவர் சொன்னார் – “நாங்கள் கலைஞரை நம்புகிறோம். அவருடைய கட்சியிலே நாங்கள் அபிமானம் வைத்திருக்கிறோம். இருந்தாலும், கலைஞர் பி.ஜே.பி.யோடு உறவு கொண்டிருக்கிறாரே, மதவாதம் நுழைந்துவிடுமே” என்றார். அந்த மேடையிலே - இங்கே சொன்னார்கள் அப்துல் கலாம் இருந்தார் என்று - அப்துல் கலாம் அல்ல, சி.சுப்பிரமணியம் இருந்தார்.

அந்த விழாவிற்கு தலைமை வகித்தவர் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் - சி.எஸ். இருந்தார். அவர் பேசும் போது சொன்னார், “பாரதிய ஜனதா கட்சி மதவாதத்திற்கு இடமளிக்கலாம். ஆனால், கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் நுழையாது என்று நம்பலாம்” என்று சி.சுப்பிரமணியம் சொன்னார்.

சி.சுப்பிரமணியம் சொன்ன வார்த்தையை நாங்கள் ஊர்ஜிதப்படுத்தினோம். நாங்கள் அதை நிரூபித்துக் காட்டினோம். மதவாதம் பா.ஜ.க.வில் தலை காட்டியவுடன் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அன்றைக்கு உணர்த்தி னோம். இன்று வரையில் அந்த மதவாத சக்திகளுக்கு நாங்கள் இடம் தராமல், இன்று வரையில் எங்கள் உறுதியைக் காப்பாற்றி வருகிறோம்.

முஸ்லிம் லீகுடனான உறவு நிலைத்து நீடிக்கும் அப்படிக் காப்பாற்றுவதிலே நாங்கள் கொண்ட அந்தப் பிடிவாதத்தை, புரிந்து கொண்ட காரணத்தினால் தான் இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நீங்கள் காணுகிறீர்கள்.

இந்தக் காட்சியை இன்று ஒரு நாள் மாத்திரம் அல்ல - இந்த மாநாட்டிற்காக மாத்திரம் காணப்படுகின்ற காட்சி அல்ல. என்றென்றும், நிலையாக இருக்கக்கூடிய காட்சியைத்தான் நீங்கள் காணுகிறீர்கள். என்றென்றும் நிலையாக இந்த அணி இருக்கும். இந்த அணியிலே எந்தக் கட்சி வந்து சேர்ந்தாலும், பிரிந்து சென்றாலும், இந்த அணி அப்படியே ஒட்டு மொத்தமாக நிலைத்து இருக்கின்ற அணி.

இங்கே அவர்கள் சொன்னதுபோல, என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே நான் 10வது படிக்கும்போதே திருவாரூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கான் பகதூர் கலிபுல்லா சாகிப் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் பிறைக் கொடியை கையிலே பிடித்துக்கொண்டு, தொண்டர் படையில் ஒருவனாக இருந்தவன் நான்.

ஏறத்தாழ, 60 ஆண்டுகளுக்கு முன்பே, பிறைக் கொடியை கையிலே பிடித்தவன் நான். அந்தப் பிறை - இங்கே நண்பர்கள் சொன்னதைப் போல வானத்திலே உள்ள சூரியனை விட்டு அகலாது (கைத் தட்டல்) அந்தப் பிறையை விட்டு சூரியனும் அகலாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மேடையில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.

இது தொடரும் - தொடர்ந்து கொண்டேயிருக்கும். எந்த இடர் வரினும் அந்த இடரை இடறி எறிந்து விட்டு தொடரும் - தொடரும் தொடரும் என்பதை எடுத்து சொல்லி, வாழ்க உங்களது ஒற்றுமை - வளர்க உங்களுடைய உள்ள உறுதி என்று கூறி விடை பெறுகிறேன்.


இவ்வாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.

நன்றி:
முஸ்லிம் லீக் வலைதளம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தாய்ச்சபைக்கு வாழ்த்துக்கள்
posted by kavimagan (dubai) [13 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1588

மிகப்பெரிய மாநாட்டினை நடத்தி முடித்திருக்கின்ற முஸ்லீம் லீக்கிற்கும், அதன் தலைவர்கள், தொண்டர்கள், தோழர்கள், என்னைப் போன்ற அனுதாபிகள் அனைவருக்கும் முதற்கண் எனது வாழ்த்தினை உரித்தாக்குகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அதே நேரத்தில், ஓர் அழகான வீட்டை துப்புரவு செய்து, வண்ணம் பூசி, அலங்கரித்து, அந்த வீட்டு வாயிற்படி மீது, அழுகிய குப்பையை கொட்டி வைத்தது போல், இனத்துரோகி கருணாநிதியை மேடையில் ஏற்றி, நாறும் குப்பைக்கு நறுமணம் என்று பட்டம் வேறு அளித்திதிருப்பதை மனசாட்சி உள்ள எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நம்புகிறேன்.

எந்த மேடையில் ஏறினாலும் வாக்குறுதி என்ற பெயரில், அல்வா கொடுப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. பாரதீய ஜனதா உடனான இவர்களது காதல் முறிந்து போனது பதவிச் சண்டயாலேயன்றி, அடிக்கடி இவர் காற்றிலே பறக்க விடுகின்ற கொள்கையினால் அல்ல என்பதை, நாட்டு நடப்புகளை அவதானிக்கின்ற எல்லா நண்பர்களும் அறிவார்கள்.

இடஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்திலே, மறைந்த தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் கோரிக்கை வைத்த போது, அவரைக் கடிந்து கருணாநிதி உரைத்த துரோக வார்த்தைகள் சட்டமன்றக் குறிப்பிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது தோழர்களே!

பிற்காலத்தில் லத்தீப் அவர்களை கொண்டே, தாய்சபையை இரண்டாகப் பிளந்து தந்தை சபையையும் உருவாக்கிய கயமையின் மொத்த உருவத்திற்குப் பாராட்டும் பட்டமும் தந்திருப்பத்தின் பின்னணி பேராசியருக்கே வெளிச்சம்.

எனதருமைத் தாய்சபையே! கருணாநிதியின் கயமைப் பிடிக்குள் சிக்காமல், காய்தே மில்லத் அவர்களின் கண்ணியமிக்க வழியில், இனியேனும் நடைபோட, என்னைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. காய்தே மில்லத் அவர்களின் கண்ணியமிக்க வழியில்
posted by salih (Bangkok) [13 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1589

காய்தே மில்லத் அவர்களின் கண்ணியமிக்க வழியில் வாழ்த்துரைத்த திரு.கவிமகன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

உங்களை மாதிரி எல்லோரும் நம் சமுதாய மக்களுக்காக பாடு பட்டால் இந்த அரசியல் நாடகமெல்லாம் ஏன் எதற்கு....... நிங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தல் அதில் நாங்கள் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. GOOD IDEA.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [14 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1593

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

புதிய இயக்கமெல்லாம் தோன்றி நம் ஊரை சின்னாப் பின்னமாக்கிக் கொண்டிருப்பது போதாதென்று கவி மகனையும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க சொல்கிறீர்களே சகோதரர் ஸாலிஹ், Bபேஷ் Bபேஷ் ரொம்ப நல்லா இருக்கு உங்கள் Idea.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Request
posted by Sayna (Bangkok) [14 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1598

Brother Kavimahan,
I will agree that ur comments,

In kalangaer period and against period how the muslims life ,

i dont want to argue anything here boc everybody know,

If you any one person 100% good in politics pls recomend me , not in central or state, in our kayal also did u find any one good man in politics recomend me,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்!!
posted by Salai.Mohamed Mohideen (California) [14 December 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1599

மிகப்பெரிய மாநாட்டினை நடத்தி முடித்திருக்கின்ற முஸ்லீம் லீக்கிற்கு வாழ்த்துக்கள். மேலும் அவர்களுடைய தீர்மானங்கள் நிறைவேறவும் வாழ்த்துக்கள்.

முதல்வர் கருணாநிதி அவர்களுக்கே மிகவும் நன்றாக தெரியும். 'நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது' தனக்கு கொடுத்து இருப்பது கொஞ்சம் டூ மச் என்று. ஏனென்றால் அவருடைய 'பாஜக உடனான கடந்தகால கள்ளகாதல்', ' கோவை கலவரத்திலும் மற்றும் பிற பிரச்னைகளிலும் அநியாயமாக முஸ்லிம்களை ஜெயிலில் அடைத்ததும் & முஸ்லிம்களுக்கு செய்த பல துரோகம்களும்' அவர்தான் மறந்து விடுவாரா அல்லது முஸ்லிம் சமுதாயம்தான் மறந்து விடுமா என்ன(?).

பழம் தின்டு கொட்டை போட்ட நமது முதல்வருக்கு, தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் ஏன் இந்த விருது தர படுகிறது மற்றும் அவருடைய புகழ் பாடபடுகிறது என்று தெரியாதா என்ன(?). அவரும் நன்றாக அறிவார் இந்த விருது ஒன்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிபளிப்பு இல்லை என்று.

இது மாதிரி நமது முதல்வர் அவர்களின் புகழ் பாடுவதும், கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துவதும், நமது முஸ்லிம் லீக்குக்கு அல்லது முதல்வர் அவர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. மத்த இஸ்லாமிய அமைப்புகள் 10 %காக போராடும்போது, 5% நல்லதொரு டிமான்ட். ஏனென்றால் அப்போதுதான் முதல்வர் அவர்களுக்கு இன்னொரு பாராட்டு விழா நடக்கும். அவரும் சந்தோஷ படுவார். நல்லதொரு கூட்டணி!

நமது முதல்வர் அவர்களுக்கு எப்போதும் ஒரு சீட் மட்டுமே கொடுத்து அதுவும் அவர்களுடை கட்சி சின்னத்திலே (without self identity ) போட்டி போட வைப்பது வழக்கமாகி விட்டது. நம்மவர்களுக்கும் அதுவே பழகிவிட்டது. விடியல் பிறக்கும் தூரம் வெகுதூரத்தில் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. URDU LANGUAGE
posted by M.A.SEYED ALI (ABUDHABHI) [14 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1601

ASSALAMU ALAIKUM. OH MUSLIM BROTHERS WHEN WE ARE TALKING ABOUT ISLAM AND MUSLIM IT IS UNNECESSARY TO BRING THE MATTER OF URDU AND URDU COMMUNITY TO BOTHER.

URDU IS A LANGUAGE OF NOT ONLY MUSLIMS IT IS OF THOSE WHO HAILED FROM LUCKNOW AND IT IS SORROUNDINGS. OFCOURSE IT MIGHT HAVE BEEN DEVICED BY THE LUCKNOW MUSLIMS FROM BABER'S HINDUSTANI BUT IT IS NOTHING TO DO WITH ISLAM.

WHILE YOU ARE BOTHERING ABOUT THEM DO THEY BOTHER ABOUT US OR RESPECTING OUR TAMIL. SORRY TO TELL YOU TRAVEL ANY WHERE IN NORTH INDIA OR HERE IN THE GULF IF YOU ARE TALKING IN TAMIL YOU WILL BE ASHAMED OF THEIR LAUGHING AND INSULT TO US.

URDU OFCOURSE A PLEASANT AND MUSICAL LANGUAGE BUT IT IS NOT A VEDIC LANGUAGE, BECAUSE IT CAME AFTER THE LAST TESTAMENT QURAN. WHEN COMPARED WITH ANY OTHER LANGUAGE IN INDIA OR ABROAD IN THAT VEDIC SENCE IT IS WORTHLESS. YES IT IS A BITTER NEWS BUT THT IS THE TRUTH.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Support to DMK
posted by Salai Sheikh Saleem (Dubai) [14 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1602

அன்பிற்க்கினியவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த நேரத்தில் அரசியல் மட்டும் பேசாது நம் இஸ்லாமிய சமுதாயத்தின் நிலைப்பாட்டையும் நாம் தனியாக இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.

நாட்டின் மொத்த ஜனத்தொகையில் நாம் எத்தனை விழுக்காடுகள் இருப்போம்? நாம் விகிதசாராப்படி நாம் எந்த அரசியல் கட்சிகளையாவது சார்ந்தேதான் இருந்து இருக்கிறோம், இருப்போம்.

சரி, எந்த கட்சியோடு கூட்டு சேர்வது? இங்கே இருக்கும் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளின் யோக்கியதைகளையும் நாம் எல்லோரும் தெளிவாக தெரிந்தே இருக்கிறோம். அப்போ நம் சமுதாயம் யாரை வைத்து நிறைய சலுகைகள் பெற்று இருக்கிறதோ அவர்கள் செய்யும் சில சில தவறுகளை மனம் பொருந்தித்தான் ஆக வேண்டும். காரணம் அவர்களுக்கு மாற்று மதத்தவர்களின் ஓட்டுகளும் வேண்டுமல்லவா.

எனவே, நமக்கு ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் நம் சமுதாயதிற்கு சார்பாய் மற்றவர்களை விட கலைஞர் இருந்திருக்கிறார். இதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. சரிதானே?

தம்பி ஸாலிஹ் பதிலில் ஏதோ ஒரு குறும்புத்தனம் தெரிகிறதே?

கலைஞருக்கு பிறகு தி மு க வின் நிலைப்பாடு எப்படி என்பதை வைத்து நாம் யாருக்கு சப்போர்ட் பண்ணலாம் என்று தீர்மானிப்போமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Decorating Chor No. 1
posted by Riluvan (Michigan) [14 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1603

I don't understand why parties such as Muslim League stoop low to get close to the power base. Do you people still believe in this deceit? Don't we know how this guy is destroying every institution? Don't we know how his family is looting the resources and now that his family has become one of the richest in the world? This is highly despicable for the community to runamock behind a chor #1 in the history.

Last but not least - Muslims in this country will progress only by their will, their hard work and discipline - not by the handouts. A party that if it claims to represents the righteous should stand-up with good elements and not with criminals. You don't need to be a Roman when in Rome and just you have to be yourself if at all you have some principles and if otherwise there is no difference between you and those on the drain.

I am sorry to say this party in many parts of India has become only a “nattamai” party amongst Muslims. I ask the office bearers of this party to look at the larger picture and identify you with good politicians and speak for people. Envisage democratic system within the party. The party should not become an exclusive club of a few.

I am highly ashamed of Muslim League for decorating one of the worst corrupt politicians. I wouldn't surprise to see if similar ceremony would occur when Jeya comes to power.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. URDU language
posted by Abdul Rahman Moulana (Hyderabad) [14 December 2010]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 1606

To Mr.Seyed Ali's comments

brother,

Majority of Indian muslims are under wrong impression that muslims in India should prefer to speak in Urdu. See, the language of urdu is not having any religious importance in Islam. It is the regional importance. Mother tongue is not chosen by anyone. Whatever be our mother tongue, we need to respect that. It's nothing to bother about others making fun of us. First of all, what rights do they have to make fun of others who respects mother tongue. My mother tongue is Tamil and i respect my language. Even though i can speak urdu, i always PREFER my tamil language. can you prove from Quran and hadees that Urdu is superior to tamil or any other language. You have to accept the fact that Our Rasoole Kareem (PBUH) didnot speak in urdu in his entire lifetime.The Almighty Allah will judge us by Our prayers and our good deeds, NOT BY the language we speak. Even a Arab speaking people are not superior to anyone. How come the Urdu?

IT'S OUR GOOD DEEDS WHICH DECIDES.

NOT THE LANGUAGE.

BUT

ALWAYS RESPECT YOUR MOTHER, MOTHER LAND AND MOTHER TONGUE.

Abdul Rahman Moulana


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Humbug
posted by Syed Ahamed (Dubai) [14 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1610

D.M.K. had alliance with B.J.B, in the year 1998. But our Baber Masjid was demolished by B.J.B. creminals in the year 1992. The speech delivered by D.M.K. Leader in the muslim league conference is totally Humbug.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Samuga(Kudumba) Nallinakka Nayagar
posted by Mohamed (Dubai) [15 December 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1611

The one and the only common agenda of Dr. Kalaignar while forming alliance with B.J.P was getting minister post for their family members (Maaran)and not the one he had said in I.U.M.L.Conference held in Chennai recently.

MAKKAL NALAM MAKKAL NALAM ENDRE SOLLUVAR
THAN MAKKALNALAM ONDRE THAN KANNA YENNUVAR

Thanks valli


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Vetri Manadu Kanda Thaisaabaikku Valthukkal
posted by Satni.Seyedmeeran (Jeddah.KSA) [15 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1612

Assalamualaikkum. Manadu Nigalchiyai MOON TV Live Kandu Mikka Makilnthom. Kalainger Seytha Uthavi, Salugakalai Mattum Petru Anubavithu Vantha, Varum Nam Makkalil Silar Nanri Maranthu Pulampuvathu Piravi Kunam.

UAE, Bangkok, America, Saudi Matrum Kadal Kadanthu Valum Engalai Pondra Tamilarkalukku Thani vaariyam Venum Ena Korikkai Vaithathumey Udan Etru Kondar Nanilam Potrum Nallinakka Nayakar.

Nengarntha Kodanukodi Nanrikalai Anaithu Tamilarkal Sarbilum Urithakku Kolkiren. TN.CM Kalainger Iruntha Medaiyil Kayalarkalakiya Mahbbob Kaka, Hamid Bakri Alim. Anbu Thamby KAM.Mohammed Abubakker 3 Nabarkal Irunthathum Kana Irattipu Santhosam. Masaallah.

Intha Manadu Thanai Vetri Manadu Akkia Valla ALLAHUkkum, Anaithu Nalla Ullangalukkum Nanri. ALHAMDHULILLAH. MASALAMA.
Edited.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கழுதைக்குப் பேரு முத்து மாலை!
posted by kavimagan (dubai) [15 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1620

நன்றி மறந்தது யார்? கருணாநிதியை 'சிறுபான்மையினரின் பாதுகாவலர்' (அல்லாஹ் மன்னிப்பானாக!) என்று பட்டம் கொடுத்து, ஒட்டுமொத்தமாக வாக்கு வங்கியை அடகு வைத்து விட்ட நமது சமுதாயமா? அல்லது கோவை கலவரத்தில், ஏராளமான உயிர்களையும், பலகோடி சொத்துக்களையும் நாம் இழந்து, கண்ணீருடன் தவித்த பொது, கோவைக்கே செல்லாமல், திரைப்பட விழாக்களில் கொட்டமடித்துக் கொண்டிருந்த கருணாநிதியா?

சகோதரர் அபூபக்கர் போன்ற நேர்மையும்,சமூகப்பற்றும் கொண்ட நல்லவர்களை, கருணாநிதி போன்ற சுயநலவாதியுடன்,ஒரே மேடையில் பார்த்தபோது மிகவும் சங்கடமாக இருந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழக முதல்வர்!!!!!!
posted by Thaika Sahib (Riyadh) [15 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1624

"UAE, Bangkok, America, Saudi Matrum Kadal Kadanthu Valum Tamilarkalukku Thani vaariyam" endra Korikkai Udan Etru Kondar "Nanilam Potrum Nallinakka Nayakar" (Naoothubillah).

But sahotharar sinthikka vendum athe Kalaingar yen Nammai pondra NRI-ku Tamil Nadile Velaivaipu erpaduthi thara muyarchikkavillai?

2G Spectrum scam has cost the government Rs.1.76 lakh crore. (Source: NDTV Website)

Enaikavathu mulusa namma makkal 1Lakh pathirupagala????? whose money is this?

KAYALPATTINAM KALAIGAR PATTINAM endru pulampitu irukama, Sambathichi kudumbatha kapathra valiya parungal sahothararhale....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Who is best?
posted by Mohamed (Dammam) [16 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1636

ஒரு சகோதரர் சொன்னதுபோல் நம் சமுதாயம் யாரை வைத்து நிறைய சலுகைகள் பெற்று இருக்கிறதோ அவர்கள் செய்யும் சில சில தவறுகளை மனம் பொருந்தித்தான் ஆக வேண்டும். காரணம் அவர்களுக்கு மாற்று மதத்தவர்களின் ஓட்டுகளும் வேண்டும் என்பதுதான் நிதர்சன உண்மை.

நாம் முஸ்லிம் நிறைந்த நாடுகளில் வாழவில்லை. அமெரிக்கவின் சூழ்சியால் அண்டாடம் பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் நம் எத்தனை சகோதரர்கள் தினமும் கொல்லபடுகிறார்கள். ஒரு சில சம்பவங்கள் இந்தியாவில் நடந்தாலும், நாம் இங்கு சுமுகமாகவே இருந்துவருகிறோம். இதற்கு நமக்கு கொடுங்கோல் ஆட்சியாளர் இல்லாமல் இருபதற்கு அல்லாஹ்வின் கிருபை தான் காரணம்.

ஒன்று மட்டும் நிச்சயமா சொல்லுவேன். கலைஞர் என்றுமே முஸ்லிம் மார்கத்தை இழிவுபடுத்தி பேசியது கிடையாது. ஹிந்து மக்கள் நிறைய பேரு வாக்களித்தும் ஹிந்துசமுதாயத்தை பல முறை கிண்டல் செய்து பேசி இருக்கிறார். அந்த கோணத்தில் பார்த்தால் மற்ற அரசியல் வாதியை விட நல்லவர் தான்.

இப்ப உள்ள சூழ்நிலை, முஸ்லிம் லீக் இருக்கும் இடம் தமுமுக இருக்காது. தமுமுக சப்போர்ட் பண்ணும் கட்சிக்கு தொவ்ஹிட் ஜமாஅத் ஆதரவு தராது. ஆக நம் சமுதாயவாக்குகள் மொத்தமா எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்காது. பிரிந்து தான் கிடைக்கும்.

எனவே, நமக்கு ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் நம் சமுதாயதிற்கு சார்பாய்மற்றவர்களை விட கலைஞர் இருந்திருக்கிறார். இதை யாரும் மறுக்கவோ மறக்கவோமுடியாது. சமுதாயத்துக்கு வாரியம் அமைத்தது, இட ஒதுக்கிடு தந்தது,உதாரணத்துக்கு சொல்லலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தம்குடும்பத்திற்கு,நம் சமுதாய மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது என்ன செய்தோம் ஒரு கணம் சிந்திப்பீர் செயல்படுவீர்
posted by salih (BANGKOK) [16 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1639

சலீம் காக்கா நான் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களை புண்படுத்தும் எண்ணத்தில் குறும்புதனமாக எழதவில்லை. உங்களுடைய கருத்தை முழுமானதாக வரவேற்கிறேன்.அதே ஒத்த கருத்துதான் என்னுடைய கருத்தும். சில நபர்களை கொண்டு நம்மூருக்கும், நம் சமுதாயத்திற்கும் எந்த நன்மையும் கிடையாது, எந்த காரியத்திலும் ஈடுபடாமலும், செய்யாமலும் அடுத்தவர்களை செய்யவிடாமலும் குறை சொல்வதையே தொழிலாக (ஜெயா புகழ்பாடிகள்)கொண்டுள்ளார்கள்.எல்லோரும் கமண்ட் பண்ணுகிறார்கள் என்பதற்காக நாமும் கமெண்ட் பண்ணுவோம் என்று முன் பின் யோசிக்காமல் நினைத்ததையொல்லாம் மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். மேலும் இங்கிலீஸ்பிஸ்ல வேற தாங்கமுடியவில்லை எல்லாம் என்னமோ தாங்கள்தான் பெரிய அறிவாளி மாதிரி கமெண்ட் பண்ணுகிறார்கள்.அவரவர்கள் அடுத்தவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு புகழ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தங்களால் தம்குடும்பத்திற்கு, நம் சமுதாய மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது என்ன செய்தோம் ஒரு கணம் சிந்திப்பீர் செயல்படுவீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. கருணாநிதியின் குணம்
posted by kavimagan (dubai) [18 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1676

உங்களைப் போன்று அல்லும்,பகலும் கண்துஞ்சாது சமூகப்பணிக்காகவே தமது வாழ்வினை அர்ப்பணித்துக்கொண்டவர்கள்,தாங்கள் இதுவரை நமது நகருக்காக,நாட்டுக்காக செய்து முடித்த நலப்பணிகளை பட்டியலிட்டால், குடும்பம்.ஊர்,மற்றும் நாட்டு நலனுக்காக எதையுமே செய்திராத என்னைப்போன்ற ஜெய புகழ்பாடிகளுக்கு ஒரு பாடமாக அமையுமே!

கருத்துக்கு பதில் கருத்துரைப்பதுதான் நியாயம். அதைத் தவிர்த்து கருத்துரைப்பவர்களை காயப்படுத்தும் கருணாநிதியின் கேடுகெட்ட யுக்தியை தயவு செய்து பின்பற்ற வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved