இவ்வாண்டு (2009-2010) பல்கலைக் கழகத் தேர்வுகளில் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர கல்லூரி பதினேழு சிறப்பிடங்களைப் (University Ranks) பெற்றுள்ளது.
மொத்தமுள்ள இருபது சிறப்பிடங்களில் ஒன்பது இடங்களை, இக்கல்லூரியின் வணிக நிர்வாகவியல் (B.B.A.) பட்டப்படிப்பு மாணவியர் மட்டும் பெற்றுள்ளனர்.
அரபி மொழி பாடத்தில் ஐந்து மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். பி.எஸ்சி. கணினியியல் (B.Sc. Computer Science) வணிகவியல் (B.Com.) மற்றும் தமிழ் பாடங்களிலும் இக்கல்லூரி மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவியரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த துறை பேராசிரியர்களையும், கல்லூரி நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், துணைச் செயலர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி, நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் மற்றும் கல்லூரி பேராசிரியையரும், மாணவியரும் பாராட்டினர்.
சென்ற கல்வியாண்டில் (2008-2009) இக்கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பதினைந்து இடங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. |