| |
செய்தி எண் (ID #) 5273 | | | செவ்வாய், டிசம்பர் 14, 2010 | DCW: பாகம் 11 - DCWஇல் உற்பத்தியாகும் பொருட்களும், அதில் உள்ள ஆபத்துகளும் (1)! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3359 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
DCW - தன் தொழிலை மூன்று பகுதியாக பிரிக்கிறது. அதன் குஜராத் தொழிற்சாலை Soda Ash பிரிவு கொண்டது. அதன் சாஹுபுர தொழிற்சாலை
(Caustic Soda பிரிவு மற்றும் PVC பிரிவு என) இரு பகுதிகள் கொண்டது . முன்னரே கண்டதுபோல் DCW - உடைய ஏறத்தாழ 1000 கோடி ரூபாய்
வருமானத்தில் 80 சதவீத வருமானம் சாஹுபுர பிரிவு மூலமே வருகிறது.
Caustic Soda பிரிவில் Caustic Soda Lye (சென்ற ஆண்டு வருமானம் = 108.54 கோடி ரூபாய்), Caustic Soda Flakes (சென்ற ஆண்டு
வருமானம் = 52.95 கோடி ரூபாய்), Caustic Soda Solid (சென்ற ஆண்டு வருமானம் = 0.40 கோடி ரூபாய்), Chlorine Liquid (சென்ற ஆண்டு
வருமானம் = 3.04 கோடி ரூபாய்), Iron Oxide (சென்ற ஆண்டு வருமானம் = 1.52 கோடி ரூபாய்), Ferric Chloride (சென்ற ஆண்டு
வருமானம் = 1.48 கோடி ரூபாய்), Hydrochloric Acid (சென்ற ஆண்டு வருமானம் = 2.08 கோடி ரூபாய்), Tri Chloro Ethylene (சென்ற
ஆண்டு வருமானம் = 27.16 கோடி ரூபாய்), Upgraded Ilmenite (சென்ற ஆண்டு வருமானம் = 103.56 கோடி ரூபாய்) மற்றும் Utox (சென்ற
ஆண்டு வருமானம் = 4.77 கோடி ரூபாய்) ஆகிய பொருட்கள் தயாராகின்றன.
Caustic Soda உற்பத்திக்கு மூலப்பொருள் உப்பு தண்ணீரே (Brine). ஏற்கனவே கண்டதுபோல் - DCW - டிசம்பர் 2007 வரை - Mercury Cell
முறையில் Caustic Soda உற்பத்தி செய்து வந்தது. இம்முறையில் கழிவாக Mercury உருவாகும். பெரும்பாலான Mercury கடலுக்கு செல்லும்
ஆபத்தும் உண்டு. Mercury இனால் உள்ள ஆபத்துகளையும் நாம் கண்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக Caustic Soda உற்பத்தி செய்யும் முறையினை மாற்றி தற்போது Membrane Cell முறையினை DCW பயன்படுத்தி வருகிறது. Caustic Soda தயாரிப்பின் ஏறத்தாழ பாதி ஊடே தயாரிப்பாக (By-Product) கிடைப்பது Chlorine மற்றும் Hydrogen. Chlorine-யை சுவாசிப்பது ஆபத்தினை விளைவிக்கும்.
Caustic Soda உற்பத்தியில் ஏறத்தாழ 70 சதவீத செலவு மின்சாரதிற்கே ஆகும். இந்தியாவில் மின்சார கட்டணம் வெளிநாடுகளை விட பல மடங்கு அதிகம். ஆகவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் Caustic Sodaவுடைய விலையும் அதிகம். Caustic Soda பயன்படுத்துபவர்களுக்கு அதனை இறக்குமதி செய்வதே லாபமானதாகும். இருப்பினும் Caustic Soda தயாரிப்பவர்கள் இந்திய அரசாங்கத்தை
நிர்பந்தம் செய்து, இறக்குமதி வரியை (Customs Duty) பல மடங்கு உயர்த்த வைத்துள்ளனர்.
DCW - உபரியாக தயாராகும் Chlorine-யை கொண்டு, Chlorine Liquid, Hydrochloric Acid போன்ற பொருட்களை தயாரிக்கிறது. அவைகள்
தவிர Trichloro Ethylene என்ற பொருளையும் தயாரிக்கிறது. Trichloro Ethylene புற்று நோய் உண்டாக்கும் தன்மை (Carcinogen) கொண்டது.
அமெரிக்காவில் மாசசூசட்ஸ் மாநிலத்தில் வோபர்ன் என்ற ஊரில் Trichloro Ethylene நீரில் கலந்தது காரணமாக பலருக்கு புற்று நோய் வந்தது. இது
1980களில் நிரூபணம் ஆனது. அதற்கு காரணமான நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு நஷ்டஈடும் பெறப்பட்டது. இது குறித்த
சம்பவங்கள் 1998 இல் A Civil Action என்ற ஆங்கில படமாக வெளியானது.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|