அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில முன்னர் கோயில் இருந்ததாக லக்னோ உயர்நீதி மன்றம் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் மசூதி இருந்த இடத்தை முஸ்லிம்களுக்கு ஒரு பகுதியென்றும், இரு ஹிந்து அமைப்புகளுக்கு மீதி இரு பகுதிகளையும் பிரித்து தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பினை எதிர்த்து உத்தர் பிரதேஷ் மாநில சுன்னி வக்ஃப் வாரியம் நேற்று டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு (Special Leave Petition - SLP) செய்துள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது (சாராம்சம்):-
(1) ஒரு சில ஹிந்துக்களின் - மசூதிக்கு நடுவில் உள்ள கூண்டின் கீழ் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் - உயர்நீதி மன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான எந்த ஆதாரமும் மேற்கோள் காட்டப்படவில்லை
(2) 1949 க்கு முன்பே ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சர்ச்சைக்குரிய இடத்தினை சேர்ந்து அனுபவித்து வந்தனர் என உயர்நீதி மன்ற தீர்ப்பு கூறி இருந்தது. ஹிந்துக்களும் அந்த இடத்தை (மத்திய கூண்டுக்கு கீழ் உள்ள பகுதியை) பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
(3) பாபர் மசூதி - அதற்கு முன்னர் அங்கிருந்த கோயிலை இடித்தே கட்டப்பட்டது என உயர்நீதி மன்ற தீர்ப்பு கூறுகிறது. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது
(4) ஒரு சாராரின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே உயர்நீதி மன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனப்படி அனைத்து சாராரின் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்
உச்ச நீதிமன்றம் இந்த மேல் முறையீட்டை எடுத்துக்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தம் உள்ள பிறருக்கு பதில் கூற அவகாசம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross