DCW-யை அனைவரும் இரசாயன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாகவே அறிந்திருப்பர். ஆனால் இன்று DCW - ஒரு மின்சாரம் உற்பத்தி செய்யும் மையமும் ஆகும்.
1991 ஆம் ஆண்டு - DCW - தன் சொந்த தேவைக்கு என 36 MW திறனில் (6 * 6 MW) மின்சார உற்பத்தி நிலையத்தை (Captive Power Plant) அதன் சாஹுபுர வளாகத்தில் துவக்கியது. அந்த நிலையம் - எண்ணையை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டது.
DCW - தற்போது 50 MW திறன்கொண்ட (2 * 25 MW) மின்சார நிலையத்தை உருவாக்கி உள்ளது. இது நிலக்கரியை (Coal-based) அடிப்படையாக கொண்டது. இந்த நிலையத்தை Thermax என்ற புனேயில் உள்ள தனியார் நிறுவனம் இரு ஆண்டுகளில் (2006 - 2008) அமைத்து கொடுத்தது.
தற்போது DCW தான் உற்பத்தி செய்யும் (உபரி) மின்சாரத்தை - பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருவாய் ஈட்டுகிறது.
இந்த மின்சார நிலையத்திற்காக அனுமதியை DCW - 2007 இல் பெற்றது. அவ்வேளையில் குறைந்த மாசு கொண்ட (Low Sulphur/Low Ash) வெளிநாட்டு நிலக்கரியையே இறக்குமதி செய்து பயன்படுத்த போவதாக DCW தெரிவித்திருந்தது.
தற்போது வெளிநாட்டு நிலக்கரியின் விலை ஏற்றத்தை காரணம்காட்டி இந்தியாவில் எடுக்கப்படும் (அதிக மாசு கொண்ட) நிலக்கரியை பயன்படுத்த DCW அனுமதி பெற்றுள்ளது. இதுதவிர மேலும் கூடுதலாக 8.27 MW மின்சாரம் உற்பத்தி செய்யவும் DCW அனுமதி பெற்றுள்ளது.
1. coal based power plant posted byHameed Sultan (Tarapur near Mumbai)[16 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1637
Yet another pollution problem. All the coal fired boilers will have dust pollution plus some co2 gas emmission etc. Same problem was faced some years back at Dhanu power plant near Mumbai having 2 x 250 MW power plant by BSES (reliance group). All the Chikku waadi(Sapotta) were affected.
After lot of protest from the locals. the adminitration had done lot of remdedies in compacting the pollution problem. Now it is within the permisable level.
The organisation had received lot of awards from Government of India. So DCW adminitration should follow the footsteps of BSES.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross