| |
செய்தி எண் (ID #) 5292 | | | வியாழன், டிசம்பர் 16, 2010 | DCW: பாகம் 15 - இறுதியாக ... | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3740 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
1959 ஆம் ஆண்டு சிறிய அளவில் சாஹுபுரத்தில் தன் தொழிற்சாலையை துவக்கிய DCW இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் காயல்பட்டணத்தில் அமைந்துள்ள இத்தொழிற்சாலையின் வளர்ச்சியில் நகரமக்கள் எந்த பெருமிதமும் அடையவில்லை; அதே வேளையில் DCW தொழிற்சாலை நிர்வாகமும் தன்னை காயல் நகரத்துடன் ஐக்கியம் படுத்திக்கொள்ள எந்த முயற்சியும் பெரிய அளவில் எடுக்கவில்லை என்பதே உண்மை.
ஆரம்ப காலங்களில் சில விளையாட்டு போட்டிகளுக்கு நகரில் DCW அனுசரணை செய்தது. தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கமலாவதி பள்ளிக்கூடத்தில் பல காயலர்கள் படித்து பயன்பெற்றுள்ளது உண்மை. இருப்பினும் அது நகர் நலனுக்காக மட்டும் அமைக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று முழுமையாக கூறமுடியாது. DCW மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் அளவில் வரி வருகிறது. இவைகளே DCW மூலம் காயல்பட்டணம் பெற்ற நேரடி நன்மைகள்.
இன்று DCW இல் 2000 க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். அங்கு வேலை செய்த/செய்யும் காயலர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அருகிலுள்ள புன்னக்காயல் போன்ற ஊர்களிலிருந்து இங்கு வேலை செய்பவர் எண்ணிக்கையும் குறைவே என்று அறியும்போது - அருகில் உள்ள ஊர்களிலிருந்து தொழிற்சாலையில் வேலைக்கு பலரை அமர்த்தக்கூடாதென்பது - நிர்வாகத்தின், பல கோணங்களில் சிந்தித்து எடுக்கப்பட்ட, முடிவோ என்று எண்ண தோணுகிறது.
மாசு சேர்ந்த காற்று, கழிவு சேர்ந்த கடல்நீர் ஆகியவை நாம் நகரில் கண்ணால் கண்டவை. இவைகளுக்கு DCW தொழிற்சாலை தான் காரணம் என்பதை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு முடிவை நாம் பாகம் 7 இல் கண்டோம். அதே மத்திய அரசு சார்ந்த நிறுவனம் (CMFRI) - அதே காலகட்டத்தில் - வெளியிட்ட மற்றொரு முடிவும் அதனை ஊர்ஜிதம் செய்கிறது. அதனை காண இங்கு அழுத்தவும்.
அவைகள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்கள் என்றாலும், 2007 டிசம்பர் வரை DCW - Caustic Soda தயாரிப்பில் அதே தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்தி வந்தது என்று அறியும்போது 1980களின் நிலை 2007 வரை தொடர்ந்தது என்று கணிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. இத்தொடரில் நாம் கண்டது போல் DCW - உடைய சாஹுபுர தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் ஏறத்தாழ அனைத்து உற்பத்திகளிலும் (Trichloroethylene, PVC, Synthetic Rutile), சுற்றுப்புற சூழலுக்கு களங்கமும், மக்களுக்கு ஆபத்தும் நிறைந்தே உள்ளது.
DCW இல் உற்பத்தியாகும் இதர பொருட்களின் மூலம் (Caustic Soda உற்பத்திமூலம் தவிர) சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த ஆய்வறிக்கையும் தற்போது இல்லை என்றாலும், இது போன்ற பொருட்களை தமிழகத்தில் தயாரிக்கும் மற்றொரு நிறுவனமான Chemplast Sanmar குறித்த தகவல்கள் நமக்கு பாடமாக உள்ளன.
Chemplast Sanmar சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ளது. இதுவே இந்தியாவின் முதல் Chlorine உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும். DCW வில் உற்பத்தியாகும் அனேக பொருட்கள் (Synthetic Rutile தவிர) இங்கும் உற்பத்தியாகிறது. இத்தொழிற்சாலையினால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இங்கே உள்ளன.
Indian People's Tribunal on Environment and Human Rights (IPT) என்பது 1993 ஆம் ஆண்டு இந்தியாவில் அமைக்கப்பட்ட மக்கள் நீதிமன்றம் ஆகும். இதில் ஓய்வுபெற்ற உச்ச மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள் பலர் உள்ளனர். சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித உரிமை விசயங்களில் நாட்டின் நீதிமன்றங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தால் இவ்வமைப்பு உருவானது.
இந்த மக்கள் நீதிமன்றம் ஜூலை 2005 இல் மேட்டூரில் உள்ள Chemplast மற்றும் MALCO தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தன் தீர்ப்பை வழங்கியது. ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி அக்பர் பாஷா காதிரி தலைமை வகித்த நால்வர் குழு அவ்விரு தொழிற்சாலைகளும் பெரும் அளவில் சுற்றுப்புற சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர். அத்தீர்ப்பை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
இத்தொழிற்சாலைகளின் மாசு விளைவிக்கும் செயலுக்கு பிரதானமாக குரல் கொடுத்தது - பாதிக்கப்பட்ட அவ்வூர்களின் மக்களே. பலரின் அகராதியில் அவ்வூர்கள் பின்தங்கிய ஊர்களாக இருக்கலாம். ஆனால் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட, சட்டரீதியாக பல முயற்சிகளையும் அவர்கள் எடுத்தார்கள் என்று காணும் போதும், பாரம்பரியம், படிப்பு, பணவசதி, உலக தொடர்பு என பல அம்சங்கள் கூடியுள்ள காயல்பட்டணம் - இதுவரை அத்திசையில் ஒரு அடியும் எடுத்து வைக்கவில்லை என காணும் போதும், பின்தங்கியவர்கள் என்ற அடைமொழி மேட்டூர் சுற்றியுள்ள மக்களுக்கு நிச்சயம் பொருந்தாது என்றே கூறவேண்டும்.
[முற்றும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|