கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை அனுப்ப வருகிற டிசம்பர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,400 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் 1,077 என மொத்தம் 3,477 இடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டது.
தேர்வை எதிர்கொள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் பல்வேறு தரப்பினரும் தேர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்வு ஒரே தாளாக இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும் (இரண்டுமே பத்தாம் வகுப்பு தரம்). இரு பிரிவுகளுக்கும் 150 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற 90 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
தகவல்:
www.tutyonline.net
|