பல பத்திரிகைகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் சில அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதராவாகவும், அவர்களின் எதிர்கட்சிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்ட தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதுபோன்ற செயல்கள் தேர்தல் சூழல்களில் அதிகரிப்பதாகவும் செய்திகள் கூறின.
நடு நிலையுடன் செயல்படவேண்டிய பத்திரிகைகள் இவ்வாறு செயல்படுவது குறித்து பல மூத்த பத்திரிகையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
தற்போது Paid News என்ற இந்த கலாச்சாரத்தை விசாரிக்க பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு தலைவர் ராவ் இந்தர்ஜித் சிங் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விசாரிக்க உள்ளது.
இப்பிரச்சனை குறித்த தங்கள் கருத்துக்களை வல்லுனர்கள், அமைப்புகள் மற்றும் இதில் உரிமை உள்ள அனைவரும் பாராளுமன்ற குழுவிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்கள் டிசம்பர் 30குள், ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ இரண்டு நகல் எடுக்கப்பட்டு
Additional Director (IT),
Lok Sabha Secretariat,
Room No.156, Parliament House Annexe,
New Delhi:110001
என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
comit@sansad.nic.in என்ற ஈமெயில் முகவரிக்கும், +91-11-2301 0756 என்ற fax எண்ணுக்கும் கருத்துக்களை அனுப்பலாம்.
இந்த குழு முன் நேராக வந்து சாட்சி சொல்ல விரும்புவோர் தங்கள் கருத்துகளை அனுப்பிவிட்டு, மேலே தெரிவிக்கப்பட்ட முகவரியில் தங்கள் வருகை குறித்த விளக்கம் கொடுக்கலாம். |