இன்று இவ்வாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது முழு சந்திர கிரகணம் (Total Solar Eclipse) ஆகும். ஆனால் சந்திரன் உதித்திருக்காத காரணத்தால் தெற்கு ஆசிய, வளைகுடா நாடுகளில் இக்கிரகணம் தெரியாது. காயல்பட்டினத்திலும் தெரியாது.
இந்திய நேரப்படி காலை 11 மணி அளவில் சந்திர கிரகணம் துவங்கும். இந்திய நேரப்படி மாலை 4:35 மணிக்கு இக்கிரகணம் முடியும். முழு சந்திர கிரகணம் 1 மணி நேரம், 12 நிமிடம் நீடிக்கும். சந்திர கிரகணத்தின் உச்ச கட்டம் இந்திய நேரப்படி மதியம் 1:46 ஆகும்.
வடக்கு ஆசியாவிலும், பசிபிக் கடல் பகுதியிலும், வடக்கு அமெரிக்காவிலும் இக்கிரகணத்தை முழுமையாக காணலாம். கிழக்கு ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவின் அனேக பகுதிகளிலும் நிலா உதிக்கும் போது கிரகணத்தோடு உதிக்கும். தென் அமெரிக்காவிலும், மேற்கு ஆப்ரிக்காவிலும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கிரகணம் ஏற்படும்போது சந்திரன் மறைந்து கொண்டிருக்கும்.
தகவல்:
www.kayalsky.com
|