கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட நெஞ்சக நோய் மற்றும் கண் பரிசோதனை முகாமில் திரளான பொதுமக்கள் பயன்பெற்றனர்.
காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில், கண் பரிசோதனை, நெஞ்சக நோய் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், 22.12.2010 புதன்கிழமையன்று காலை 09.00 மணி மதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற்றது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கி, உரையாற்றினார்.
கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஆறுமுகநேரி காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபன் முகாமைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக் நன்றியுரையுடன் துவக்க நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் துவங்கிய மருத்துவ பரிசோதனை முகாமில், நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.சரவணன் நெஞ்சக நோய்க்கான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் சொக்கநாதன் கண் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
கண் மருத்துவ பரிசோதனை முகாமில், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை - தூரப்பார்வை, கண் கருவிழியில் புண், கண் புரை உள்ளிட்டவற்றுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாம் ஏற்பாடுகளை, அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். இம்முகாமில், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |