ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சிறப்பு மலர்க்குழுவின் சார்பில் உலக காயலர்களுக்கு ஒரு வேண்டுகோள் பின்வருமாறு வைக்கப்பட்டுள்ளது:-
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே! இன்ஷாஅல்லாஹ், சீரோடும், சிறப்போடும் வெளிவரவிருக்கும் எமது மலருக்கான படைப்புகள், உலகின் பல பாகங்களில் இருந்தும் எம்மைச் சேர்ந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிக்கிறது.
அதே நேரத்தில், அநேக காயலர்கள் ஒரு சில குறிப்பிட்ட தலைப்பிலேயே எழுதிக் கொண்டிருப்பதால் எமது மலர்க்குழு சார்பாக, கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகளை ஒரு ஆலோசனையாகத் தரலாம் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் தலைப்புகளை தங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
இந்தத் தலைப்புக்கள் ,அனைவரையும் எழுதத் தூண்டுவதற்காகத்தானே தவிர, இந்தத் தலைப்புக்குள் மட்டுமே தாங்கள் எழுத வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
*** எனது பயணங்களும், படிப்பினையும்.
*** அகிலத்தை அன்பால் வெல்வோம்!
*** மறக்க முடியாத நாட்கள்
*** மறுமையை நோக்கி!
*** அமீரகத்தில் எனது ஆரம்ப நாட்கள்
*** கண்மணியே நாயகமே!
*** என்னைக் கவர்ந்த காயலர்கள்!
*** பாலைவனமா?சோலைவனமா?
*** ஏன் எடுத்தாய் இந்தக் கோலம்?
*** எது நம்மைத் தடுக்கிறது?
*** மாணவக் கண்மணிகளே!
*** பள்ளி,கல்லூரி நாட்கள்
*** கவிதைகள்,துணுக்குகள்,
*** இளஞ்சிறார் வரைந்த இயற்கைச் சித்திரங்கள்
இன்னும் எப்படி வேண்டுமானாலும், நெறிமுறை மீறாமல் எழுதி, டிசம்பர் 31ஆம் தேதிக்குள், kayaluae.souvenir@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் தகுதியான படைப்புகளை, சீர்செய்து வெளியிடுவது எங்கள் பொறுப்பு.
சிறந்த படைப்புகளுக்கு பணமுடிப்பு வழங்கி கவுரவிக்கப்படும். அப்புறம் என்ன? பேனாவை எடுங்க! பட்டையைக் கிளப்புங்க!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |