Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:52:26 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5330
#KOTW5330
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 23, 2010
“தொலைநோக்கு பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும்! ஐக்கியப் பேரவை தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் உள்ள பொது நல அமைப்புகள் சார்பாக ஆலோசனை கூட்டம் ஒன்று நவம்பர் 24 அன்று காலையில் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

“தொலைநோக்கு பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கை குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியாக அவ்வறிக்கையை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பரிசீலனைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டு, நவம்பர் 25 அன்று ஐக்கியப் பேரவையில் அவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.

மேலும் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நகர பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், இவ்வறிக்கை குறித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளுடன் பேச விரும்புவதாகவும் ஐக்கிய பேரவையிடம் கடிதம் மூலம் அப்போது தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறு (டிசம்பர் 19) அன்று காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஐக்கிய பேரவை அலுவலகத்தில் அன்று மாலை நடைபெற்ற அக்கூட்டத்தில், பேரவை நிர்வாகிகள் பலரும், நகர பொதுநல அமைப்புகளான காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், ரெட் ஸ்டார் சங்கம், இளைஞர் ஐக்கிய முன்னணி, மஜ்லிஸுல் கவ்து சங்கம், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



நீண்டநேரம் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், இப்பரிந்துரைகள் குறித்து ஐக்கிய பேரவையின் பொதுக்குழு முடிவெடுக்கும் என ஐக்கிய பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவிலுள்ள மஹல்லாக்களுக்கு இதுகுறித்து அழைப்பு அனுப்பப்படும் எனவும் ஐக்கிய பேரவை சார்பாக தெரிவிக்கப்பட்டது.



“தொலைநோக்கு பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை,

பாரம்பரியமிக்க காயல்பட்டனத்தின் வரலாறு - அதன் தனிச்சிறப்புகள் குறித்து எடுத்துக்கூறி, தற்போது நகரின் முன்னர் உள்ள தலையாய பிரச்சனைகள் என்ன என்பதனை விளக்கி, அதனை எவ்வாறு நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்தினரும் வலுவான கூட்டமைப்பின் மூலம் எதிர்கொள்வதென விளக்குகிறது.

நவம்பர் 24 அன்று நடந்த கூட்டத்தின் முடிவின்படி இச்செயல்திட்ட முன்வடிவின் நகல்கள் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கு, அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கூட்டவுள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னர், நகரிலுள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் இப்பரிந்துரையின் நகல்கள் அனுப்பப்பட உள்ளன.

அவ்வறிக்கை பரிந்துரைத்துள்ள அனைத்து ஜமாஅத்துக்களின் கூட்டமைப்பு வடிவம் இதோ:-

Kayalpatnam All Jamaths Forum


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Anaithu Pallivasalkalin Sangangal.
posted by Satni.S.A.Seyedmeeran (JEDDAH.KSA) [23 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1759

Assalamualaikkum. Kayalpatanathil Ovvoru Mohallavirkum Parampariya Palamperm Sangangal Niraya Ullathu Ellorum Arinthatu. Erattakulathu Palli Jamathku Jalaliya Sangam, Koman Mottaiyar Palliku Koman Jamath Sangam, Mohideen Palliku Majlisul Karam Sangam, Aroosiya Palliku Qawthiya Sangam, Pudu Palliku Majlisul Rizhwan Sangam, Mohdoom Palliku Faiseen Sangam, Kodimara Sirunainar Pallikku Mahboob Subhani Sangam, Ahmed Nainar Pallikku Khazi Alauddeen Appa (KAT)Sangam, Sirupallikku Manbaul Barakkath Sangm Idupondru Kaylil Anaithu Pallikkum Sangam, Matrum Podu Nala Sangangalum Iruppathai Manathil Niruthi Avarkalaiyum Pakkathil Ondru Serthum Intha Tholainokku Parvai Parthal Ellam Nalla Irukkum. INSHAALLAH.

Ellam Valla Allah Endrum Nammai Otrumaiyudanum, Unmaiyudanum Vala Nalarul Purivanaga AAMEEN.

Kayal Nalam Nadum Anbin Satni.S.A.Seyedmeeran.JEDDAH.KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெற்றி பெறவாழ்த்துக்கள்
posted by salih (bangkok) [23 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1760

சமுதாய முன்னேற்றத்திற்கும் சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கும் அனைத்து ஜமாஅத் கூட்டு அமைப்பின் மூலம் அல்லாஹ் வெற்றியத்தந்தருள்வானாக ஆமின். வெற்றி பெறவாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இது பரிந்துரை மட்டுமே...!
posted by SK Salih (Kayalpatnam) [23 December 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1762

சகோதரர் சட்னி செய்யித் மீரான் கூறியுள்ளது போல, மாஷாஅல்லாஹ் நமதூர் மக்கள் பொதுச்சேவையில் சோர்ந்தவர்கள் அல்ல. ஊரில் உள்ள ஒவ்வொரு ஜமாஅத்துக்கு என பாரம்பரியமிக்க அமைப்புக்கள் உண்டுதான்...

குறிப்பிட்ட சங்கங்களின் மூலம் ஏன் இப்பரிந்துரை சமர்பிக்கப்பட்டது எனில், இப்பரிந்துரையை - ஐக்கிய பேரவைக்கு எடுத்து செல்லும் போது, குறிப்பிட்ட சில நபர்களோ அல்லது ஒரேயொரு அமைப்போ மட்டும் கொண்டு சென்றால் நன்றாக இருக்காது என்றும், ஆகவே விரைவாகவும் - அதே நேரத்தில் முடிந்தளவு பரவலாகவும் கலந்தாலோசித்து சமர்பிக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவுமே, ஏழு சங்கங்கள் மட்டும் துவக்கத்தில் அணுகப்பட்டன.

இன்ஷாஅல்லாஹ், மஹல்லாக்களுக்கு இப்பரிந்துரைகளை சமர்பிக்கும்போது, நகரில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் இதன் சுருக்கம் கொடுக்கப்படும். இது ஊர் நலனைக் கருத்தில் கொண்டு பெரியவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட செயல்திட்ட முன்வடிவு மட்டுமே! இது மக்கள் யாவரையும் சென்றடைந்து, அவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்பட்டு முடிவு எடுக்கப்படவேண்டிய விஷயம்.

இது நடைமுறையில் வெற்றி பெற அனைத்து மக்களின், அனைத்து சங்கங்களின் மற்றும் அனைத்து ஜமாஅத்களின் முழு ஆதரவு மற்றும் உழைப்பு அவசியம் தேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [24 December 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1773

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்றைய கால சூழ்நிலையில் நம் ஊரில் நிலவும் பல பிரச்சினைகளுக்கும் , கலாச்சார சீர்குலைவுக்கும் தீர்வு காண, இந்த மாதிரியான கூட்டமைப்பு அதுவும் எல்லா மக்களுடைய கருத்துக்களையும் ஓன்று சேகரித்துக் கொண்டுவந்து செயல்படக்கூடிய கூட்டமைப்பு அவசியம் தேவை.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நல்லதொரு அமைப்பை உருவாக்கித்தந்து நாம் அனைவர்களும் ஒற்றுமையாக , கலாச்சாரம் பேணி , சுபிட்சமாக வாழ கிருபை செய்வானாக ஆமீன்.

இதற்காக பாடுபடக்கூடிய அனைவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. WELCOME WITH MY PERSONAL VIEW
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [25 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1786

This is very much eagerly awaiting proceses since long days.Realy welcome step to form NIZAM KAYAL.MY persinal view is association must be attention to solve all type of FAMILY PROBLEM ISSUE under the sariya with power full action, councelling team, leagal team mainly dedicated Alim team with all type of belivers to take right decission of islamic issue.

once this association issue any orders it should be obayed otherwise this same association have take punishment action or comensation step to the victim mainly in the Family issue.

if this team have no power or truth full or realy social work on mind for any type issue then it will not be used. I pray Allah will give power to this team and he will guide us on right way to form real kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (21/12/2010) [Views - 2850; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved