காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்புகளால், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ள “தொலைநோக்குப் பார்வையில் காயல்பட்டினம் – செயல்திட்ட முன்வடிவு”க்கு, சஊதி அரபிய்யா, ரியாத் காஹிர் பைத்துல்மால் செயற்குழு ஆதரவளித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
எமது சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மாலின் 21ஆவது செயற்குழுக் கூட்டம், 16.12.2010 வெள்ளி இரவு சுமார் 07:30 மணியளவில், பத்தா டிசைன்ஸ் பார்க் இல்லத்தில் இறையருளால் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் என்.டி.ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள் தலைமை ஏற்க, KBM உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எம்.நூர் முஹம்மது ஜெகரிய்யா அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கம் செய்தார்.
பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்:
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பிப்ரவரி 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை KBMஇன் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - காயல்பட்டினம் வருங்கால செயல்திட்ட முன்வடிவுக்கு ஆதரவு:
நீண்ட நெடிய வரலாற்றுப் புகழ் வாய்ந்த நம் காயலின் தொன்மை கலாச்சாரம் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்றும், நகர மக்களின் நலவாழ்வில் அக்கறை கொண்டும் தீட்டப்பட்ட ”எதிர்கால காயலின் செயல்திட்ட முன்வடிவுக்கு எமது காஹிர் பைத்துல்மால் தனது ஆதரவினை வழங்குகிறது. மேலும் இது விடயத்தில் அனைத்து காயலர்களும் நல் ஆதரவு வழங்குமாறு எம் மன்றம் அன்புடன் வேண்டுகிறது.
தீர்மானம் 3 - நலத்திட்ட உதவிகளுக்கு நிதி ஒதுக்கீடு:
*** இக்ராஃ அலுவலகத்திற்கு டேபிள் வாங்கும் வகைக்கு நன்கொடையாக ரூ.8,000 வழங்குவது என நமது KBM தீர்மானித்துள்ளது.
*** கேன்சர் உருவாகும் காரணங்கள் பற்றி கண்டறியும் முயற்சியில் தடம்பதித்துள்ள CFFC கமிட்டிக்கு எமது KBMஇன் ஆதரவை தெரிவிப்பதுடன், அதன் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக எமது KBM ரூ.7,000 வழங்குவது என தீர்மானித்துள்ளது.
*** கடந்த 14.10.2010 அன்று ரியாதில் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்களின் முன்னிலையில் நமது நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளை கண்டறிவதற்கான முன் முயற்சிகளை எடுப்பது பற்றி விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. (அந்த செய்தி நமது காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் மூலம் வெளியிட்டிருந்தோம்.) அதில் ரியாத் கிங் ஸவூத் பல்கலைக் கழக பேராசிரியரும், புற்றுநோய் ஆய்வு நிபுணருமான டாக்டர் மாசிலாமணி அவர்களைத் தொடர்புகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
*** மேற்காணும் தீர்மானத்தின் அடிப்படையில் டாக்டர் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நாம் நேரடியாக ஓர் அமர்வின் மூலம் வரிவாக உரையாடி நடைமுறைபடுத்த வேண்டிய நல்லதோர் விதிமுறைகளைக் காணலாம் என தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி கீழ்காணும் எமது குழு டாக்டர் அவர்களைச் சந்திக்கவுள்ளது, இன்ஷா அல்லாஹ்...
(01) டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள்
(தலைவர், காயல் நற்பணி மன்றம், தம்மாம்)
(02) டாக்டர் இபுறாஹீம் அவர்கள்
(மருத்துவக் குழு ஆலோசகர், KBM - ரியாத்)
(03) டாக்டர் ஜியாத் அபூபக்கர் அவர்கள்
(மருத்துவக் குழு ஆலோசகர், காயல் நற்பணி மன்றம், ஜித்தா)
(04) டாக்டர் அப்துல் காதிர் அவர்கள்
(மருத்துவக் குழு ஆலோசகர், KBM - ரியாத்)
(05) எம்.ஈ.எல். நுஸ்கீ அவர்கள்
(06) எம்.என். மின்ஹாஜ் அவர்கள்
(07) எஸ்.ஏ.டி.கூஸ் அபூபக்கர் அவர்கள்
(08) ஏ.ஹெச். முஹம்மது நூஹ் அவர்கள்
(09) எம்.ஓ.எஸ். அப்துற்றஹீம் அவர்கள்
(10) ஒய்.ஏ.எஸ். முஹ்சின் அவர்கள்
மருத்துவம் மற்றும் சிறுதொழில் உதவிகள்:
(1) மார்பக புற்று நோயால் கடும் அவதிக்குள்ளாகிவரும் சகோதரி ஒருவரின் உயர் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 10,000 வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
(2) நுரையீரல் பாதிப்பால் மிகுந்த வேதனைக்குள்ளாகிவரும் சகோதரி ஒருவரின் சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவியாக ரூ 10,000 வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
(3) இதய நோயால் இன்னல்பட்டுவரும் ஏழை சகோதரர் ஒருவரின் சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவியாக ரூ 9,000 வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
(4) ஏழைச்சகோதரி ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு வைத்தியம் செய்வதற்கு பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் அவர்களின் மருந்து செலவிற்காக ரூ 5,000 வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(5) சிறுதொழிலில் ஆர்வமிருந்தும் பொருளீட்ட முடியாமலிருந்துவரும் ஏழைச் சகோதரியின் வேண்டுதல் படி சிறுதொழில் நிதியுதவியாக (Sewing Machine) தையல் இயந்திரம் ரூ.5,000 வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
(6) கைத்தொழிலில் ஆர்வமுள்ள சகோதரர் போதிய வருமானமின்றி தவிப்பதால் அவரின் விண்ணப்பத்தை ஏற்று ”வால் கட்டிங் மிஷின்” – ரூ 3,100 ஒன்று சிறு தொழில் நிதியுதவியாக வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் நல்ல பல ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்களுக்கிடையில், சுவையான காயல் கறிகஞ்சி மற்றும் பண்டங்கள் பல பரிமாறப்பட்டன.
இறுதியில், இனிய ஸலவாத்துடன் இறையருளால் கூட்டம் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு ரியாத் காஹிர் பைத்துல்மால் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாத் காஹிர் பைத்துல்மால் சார்பாக,
ஏ.எச்.முஹம்மத் நூஹ்,
ரியாத், சஊதி அரபிய்யா. |