காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள பெரிய சதுக்கையில், இமாம்களான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுவதுடன், மார்க்க தொடர் சொற்பொழிவு நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், இவ்வாண்டு (முஹர்ரம் 08ஆம் நாள் முதல் 10ஆம் நாள்) 15.12.2010 முதல் 17.12.2010 வரை தினமும் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி, இமாம்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
(முஹர்ரம் 09ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை) 15.12.2010 முதல் 17.12.2010 வரை மூன்று நாட்கள் தொடர்சொற்பொழிவு நடைபெற்றது.
துவக்க நாள் உரையை, காயல்பட்டினம் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ,
இரண்டாம் நாள் உரையை, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ,
மூன்றாம் நாள் உரையை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பெரிய சதுக்கை ஹுஸைனிய்யா ஹதீது மஜ்லிஸ் நிர்வாகத்தார் செய்திருந்தனர். |